பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வரவு செலவுத்திட்ட ஆலோசனைகளில் ரத்துச் செய்யப்பட்ட தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வைத்தியர்கள் அரச அதிகாரிகளின் எதிர்ப்பு காரணமாக மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

வைத்தியர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை மீண்டும் வழங்க பிரதமர் தீர்மானித்ததை அடுத்தே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை வழங்க முடிவு செய்யப்பட்டதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார்.