நாட்டின் சுகாதாரத்துறை நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 

Published By: Nanthini

09 Jul, 2023 | 04:50 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் சுகாதாரத்துறை நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. மேலும், இப்பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. மருந்து தட்டுப்பாடு இதிலுள்ள முக்கியமான பிரச்சினையாகும். மறுபுறம் மருந்தின் தரம் தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாத மருந்துகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளமையால் பிரச்சினைகள் எழுந்துள்ளது. 

மேலும், விலைமனு செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறுவதில்லை. அவ்வாறு உரிய முறையில் விலைமனு மேற்கொள்ளப்படாமல் மருந்துகளை கொள்வனவு செய்துள்ளமையால் மருந்தின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இதேவேளை ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும்போது அதன் பிரதிபலன்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இருப்பினும், அவை மக்களை சென்றடைவதில்லை. மனித வளம் தொடர்பிலான பிரச்சினைகள் நான்காவது பிரச்சினையாகும். 

விசேட வைத்திய நிபுணர்கள் நாளுக்கு நாள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். புதிதாக நியமனம் பெறும் வைத்தியர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். அத்துடன் வைத்தியசாலைகளில் வைத்திய இயந்திரங்கள் செயற்படுவதில்லை. 

சுகாதார அமைச்சர் கூறும் விடயங்கள் கேலிக்கையான விடயங்களாக மாறியுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்தொழிலாளர்களின் குரலாக எமது குரல் நாடாளுமன்றில்...

2024-10-15 02:50:34
news-image

யாழில் ஊடக பணியாளர் மீது தாக்குதல்...

2024-10-15 02:44:05
news-image

கடந்த கால அரசுகளைப்போன்று அநுரவும் ஏமாற்றக்கூடாது...

2024-10-15 02:36:49
news-image

யாழில் தேசிய நல்லிணக்கத்திற்கான செயற்றிட்டம் உருவாக்கலுக்கான...

2024-10-15 02:32:31
news-image

அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின்...

2024-10-15 02:23:54
news-image

பிரதமரிடம் 14 வயதுடைய பாடசாலை மாணவி...

2024-10-15 01:56:57
news-image

உலக முடிவு பள்ளத்தாக்கில் கீழே தள்ளி...

2024-10-14 21:42:22
news-image

சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிப்பு;...

2024-10-14 20:21:00
news-image

மட்டக்களப்பில் மோட்டார்சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி...

2024-10-14 20:06:41
news-image

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகனமொன்றினை...

2024-10-14 19:44:07
news-image

ஆயுர்வேத வைத்தியரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை...

2024-10-14 21:39:04
news-image

தமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர், நிர்வாக செயலாருக்கு...

2024-10-14 21:25:30