மாற்றுத்திறனாளிகள் தமக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்காக, மோட்டார் போக்குவரத்துத் துறை உதவி ஆணையாளர், தலைமை மோட்டார் போக்குவரத்து பரிசோதகர், மருத்துவர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தற்போதுள்ள அங்கவீனத்தின் அடிப்படையில் ஏதேனும் வாகனத்தைச் செலுத்தும் சாரதி உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளியான நபர், அவர் விண்ணப்பித்த வாகனத்தை செலுத்துவதற்கு சரியான உடல் தகுதி கொண்டவரா என்பதை இந்தக் குழு முதற்கட்டமாக பரிசோதனை மேற்கொள்ளும்.
வாகனத்தின் உதிரிபாகங்களை பயன்படுத்துவதற்கு தற்போதுள்ள அங்கவீனம் தடையாக உள்ளதா என்பது குறித்து நடைமுறைச் சோதனை நடத்தப்படும்.
அவ்வாறான தடை இல்லை என நிபுணர் குழு சிபாரிசு செய்தால், குறித்த நபர் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளும் சாதாரண முறையின் கீழ் எழுத்து மற்றும் நடைமுறைப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM