சிரியாவின் ஜனாதிபதி அஸாத்தை போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் கனடாவும் நெதர்லாந்தும்

Published By: Vishnu

09 Jul, 2023 | 03:54 PM
image

லத்தீப் பாரூக்

பெரும்­பாலும் அமெ­ரிக்­காவின் ஆலோ­ச­னையின் கீழ் சிரி­யாவின் கொடுங்கோல் ஆட்­சி­யாளர் பஷர் அல் அஸாத்­தை­ அ­ர­பு­ லீக்கில் மீண்டும் இணைத்து, அர­பு­ல­க­ சர்­வா­தி­கா­ரிகள் மீண்டும் அவ­ரை­த­ழுவிக் கொள்ளும் இச் சந்­தர்ப்­பத்தில், கன­டாவும் நெதர்­லாந்தும் அவ­ருக்கு எதி­ராக சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்­துள்­ளன. தமது சொந்­த­நாட்டு மக்கள் மீது போர் குற்­றங்­களைப் புரிந்­துள்ளார் என்­ப­துதான் அவர் மீதான பிர­தான குற்­றச்­சாட்டு. 

சில அறிக்­கை­களின்படி ­சர்­வ­தே­ச ­நீ­தி­மன் ­றத்­துக்கு இவ்­வி­ரண்டு நாடு­களும் சமர்ப்­பித்­துள்ள விண்­ணப்­பத்தில் 'அஸாத் சர்­வ­தேச சட்­டங்­களை எண்­ணற்ற விதத்தில் மீறி­யுள்ளார்' என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சித்­தி­ர­வ­தைகள், ஏனைய வகை­யான கொடூ­ரங்கள், மனி­தா­பி­மா­ன­மற்ற விதத்தில் அல்­லது தரக்­கு­றை­வான முறையில் மனி­தர்­களை நடத்­தி­யமை, அவ்­வா­றான தண்­ட­னை­களை வழங்­கி­யமை, பலாத்­கா­ர­மாக காணாமல் ஆக்­கப்­பட்­டமை, பாலியல் மற்றும் பால் அடிப்­ப­டை­யி­லா­ன ­வன்­மு­றைகள், சிறு­வர்கள் மீதான உரி­மை ­மீ­றல்கள் என இந்தக் குற்­றச்­சாட்டுப் பட்­டியல் நீண்டு செல்­வ­தாக சர்­வ­தேச நீதி­மன்றம் விடுத்­துள்­ள­ அ­றிக்­கை­யொன்றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சுன்னாஹ் பிரிவு முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட சிரி­யாவில் 15 வீதம் மட்­டுமே ஷீஆக்கள் உள்­ளனர். ஆனால், 1970 முதல் அந்­த­நாடு சிரி­யாவின் ஷீஆ பிரிவு இரா­ணுவ சர்­வா­தி­காரி ஹாபிஸ் அல் அஸாத்தின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருந்­தது.

அவர் இரா­ணுவ சதிப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்­றினார். அவரைத் தொடர்ந்து அவ­ரது மகன் பஷர் அல் அஸாத்தும் தந்­தைக்கு ஒப்­பீட்­ட­ளவில் எந்­த­விதக் குறைவும் இன்றி அதே­பா­ணி­யி­லான சர்­வா­தி­கார ஆட்­சியைத் தொட­ரு­கின்றார். 2011ல் அர­பு­வ­சந்தம் ஏற்­பட்­ட­போது சிரிய மக்­களும் அடிப்­படை சுதந்­தி­ரத்­துக்­கான உரி­மை­குரல் எழுப்பி ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டனர்.

ஆனால், அஸாத் பதி­லுக்கு அந்த மக்கள் மீது காட்­டு­மி­ராண்டித் தனத்­தையும், மூர்க்­கத்­த­னத்­தையும் கட்­ட­விழ்த்­து­விட்டு வர­லாற்றின்  இடைக்­கால பாணியில் பதில் அளித்தார். மக்கள் அதை எதிர்த்­தனர்.

ஆனால், பஷர் அல் அஸாத், அந்­த­மக்கள் எழுச்­சிக்­கு­ ப­தி­லாக ஒவ்­வொரு கிராமம் கிரா­ம­மாக, ஒவ்­வொரு நகரம் நக­ர­மாக குண்­டு­ வீசி தகர்த்து, மனித உயிர்­க­ளையும் வகை­தொ­கை­யின்றி பலி­யெ­டுத்தார். தனது சொந்­த ­நாட்டை அவரே பல­வீ­னப்­ப­டுத்­தினார். அதன் மூலம் இஸ்­ரே­லை­ அவர் பாது­காப்­பா­ன­தா­கவும் உறு­தி­யா­ன­தா­கவும் ஆக்­கினார். அதற்கு ஈடாக அமெ­ரிக்கா இந்த யுத்தக் குற்­ற­வா­ளிக்கு பூரண பாது­காப்பை வழங்­கி­யது.

அமெ­ரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் அர­பு­லக சர்­வா­தி­கா­ரிகள் ஏன் அஸாத்தை காப்­பாற்ற நினைக்­கின்­றார்கள் என்­பது பற்­றி­பத்தி எழுத்­தா­ளர்­ க­லா­நிதி அமீ­ரா ­அபு அல் பெட்டோஹ் தன­து ­கட்­டுரை ஒன்றில் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்:

 “அமெ­ரிக்கா அஸாத்தின் கொடிய ஆட்­சிக்கு­ பா­து­காப்பை வழங்­கி­யது. ‍வொஷிங்­டனின்  வெளிப்­படை­யான உத்­த­ர­வுகள் எதுவும் இன்றி கசாப்­புக்­க­டைக்­காரன்  பஷரை தனது நாட்­டுக்கு வர­வ­ழைக்­க­வோ ­அல்­லது மீண்டும்  அவரை தன்­னோடு இணைத்துக் கொண்டு வர­வேற்பு அளிக்­கவோ சவூதி இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் ஒரு­போதும் இணங்கி இருக்­க­மாட்டார். இத்­த­கைய பங்­க­ளிப்­புக்­களைத் தான் அமெ­ரிக்­காவும் ஏனைய கால­ணித்­துவ சக்­தி­களும் வழங்­கி­வ­ரு­கின்­றன.

இந்த கசாப்­புக்­க­டைக்­காரன் தனது சொந்­த­மக்­க­ளுக்கு எதி­ராக பொஸ்­பரஸ் கொத்­தணி குண்­டு­க­ளையும் பீப்பாய் வெடி­பொ­ருட்­க­ளையும் பாவித்து அவர்­களைக் கொன்று குவித்­தவன்.

பத்­து­லட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் இவ்­வாறு கொல்­லப்­பட்­டுள்­ளனர். அந்­த­ நாட்டின் சனத்­தொ­கையில் அரை­வா­சிக்கும் அதி­க­மா­ன­வர்கள் பல­வந்­த­மாக தம­துதாய் நாட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். அவ­னது சிறைச்­சா­லைகள் கூட ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பாவி மக்­களால் நிரம்­பி­வ­ழி­கின்­றன.

அங்­கே­ அ­வர்கள் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டும் மிகவும் பயங்­க­ர­மான முறையில் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டும் வரு­கின்­றனர். பல­ந­க­ரங்­களின் கட்­டி­டங்­களில் மக்கள் உள்ளே இருந்­த­நி­லையில் அவற்றைத் தரை­மட்­ட­மாக்­கியும் தீக்­கி­ரை­யாக்­கியும் அழித்­து­விட்டு, நாட்டின் சுமார் 70 வீத­மான உள்­கட்­ட­மைப்பை சிதைத்து சின்­னா­பின்­ன­மாக்­கி­விட்டு, ரஷ்­யா­வி­னதும் ஈரா­னி­னதும் ஆக்­கி­ர­மிப்­புக்­காக தன­து­ நாட்டின் கத­வு­களைத் தாரா­ள­மாகத் திறந்­து­விட்டார். எஞ்­சி­யி­ருந்­த ­சி­ரி­ய ­மக்­களை இந்த ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் அழித்­தனர்” என்று குறிப்­பிட்­டுள்ளார்.

2011 அரபு வசந்த புரட்சி அர­பு­லகை ஒட்­டு­மொத்­த­மாக அதி­ர­வைத்­தது. கொடுங்கோல் ஆட்­சி­யா­ளர்­களின் கால்­களில் நடுக்கம் எடுத்­தது. எகிப்தின் ஹொஸ்­னி­ மு­பாரக், துனீ­ஷி­யாவின் செய்த் அல் ஆபிதீன் பின் அலி, லிபி­யாவின் முஅம்மர் அல் கதாபி, யெமனின் அலி­அப்­துல்லாஹ் சாலேஹ் போன்­ற­வர்கள் இந்த நடுக்­கத்தால் வீழ்ந்­தனர்.

சிரி­யாவின் அஸாத் போன்ற மேலும் சிலர் தமது முடி­வுக்­காக காத்­தி­ருந்­தனர். அஸாத் வீழ்ச்­சியின் விளிம்பில் தத்­த­ளித்தார். ரஷ்­யாவின் ஆக்­கி­ர­மிப்பால் அவர் பாது­காக்­கப்­பட்டார். ரஷ்­யாவின் ஆக்­கி­ர­மிப்பின் கீழ் அடி­ப­ணி­வதை அஸாத் தேர்ந்­தெ­டுத்தார். தனது பிராந்­திய சகாக்­களின் விதியைப் பார்த்­தபின் தான் ஏற்­ப­டுத்­திய தனது நாட்டின் சிதை­வு­களின் உச்­சத்தில் ரஷ்­யாவின் ஆக்­கி­ர­மிப்பின் கீழ் ஒரு கைப்­பொம்­மை­யாக இருப்­பதை அவர் தெரி­வு­செய்தார்.

அரபு வசந்த புரட்­சியால் அதிர்ந்து நடுக்கம் எடுத்­தது சிரி­யாவின் சர்­வா­தி­கா­ரிக்கு மட்டும் அல்ல. அவ­ரோடு சேர்த்து ஒட்­டு­மொத்த அர­பு­லக சர்­வா­தி­கார மன்­னர்­க­ளுக்கும் இள­வ­ர­சர்­க­ளுக்கும் இந்த நடுக்கம் ஏற்­பட்­டது. தத்­த­மது மக்­களும் அவர்­களின் சுதந்­தி­ரத்­துக்கும் உரி­மைக்கும் சுய கௌர­வத்­துக்கும், ஜன­நா­ய­கத்­துக்கும் குரல் கொடுப்­பார்கள் என்று அவர்கள் அஞ்­சி­னார்கள்.

தமது மணி­ம­கு­டங்கள் வீழ்ந்­து­விடும் என்ற அச்சம் அவர்­களைப் பற்றிக் கொண்­டது. அதனால் அவ­ச­ர­அ­வ­ச­ர­மா­க­அ­வர்கள் சியோ­னிஸ எதி­ரி­க­ளுடன் கூட்­ட­ணி­களை அமைத்துக் கொண்­டார்கள். அப்­போது இந்­த­மக்கள் எழுச்­சியால் சியோ­னி­ஸமும் சற்­று­கு­ழப்­ப­ம­டைந்­தி­ருந்­தது. சிரி­யாவின் ஆட்­சி­பீ­டத்தில் அஸாத்தை வைத்­தி­ருக்கும் தன­து­வி­ருப்­பத்தை இஸ்­ரேலின் பென்­ஜமின் நெத்­தன்­யாஹு ஒரு­போதும் இர­க­சி­ய­மா­க­வைத்­தி­ருக்­க­வில்லை.

பஷரின் தந்தை ஹாபிஸ் அல் அஸாத் 1967ல் சிரி­யா­வுக்­கு­சொந்­த­மா­ன­கோலான் குன்­று­பி­ர­தே­சத்தை சியோ­னிஸ்ட்­டு­க­ளிடம் கைய­ளித்தார். மகன் அஸாத்தைப் போலவே அவரும் ஒரு­கொ­டிய ஆட்­சி­யாளர். ஹமா நகரில் இன­ஒ­ழிப்பு நட­வ­டிக்­கை­யை­மேற்­கொண்­டவர்.

பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த சிரி­ய ­மக்­க­ளை­ அச்­ச­நி­லைக்­கு­கொண்­டு­வந்து, அந்­த­மக்­களின் அடிப்­படை உரி­மை­களை நசுக்கி அடக்கி ஒடுக்கி, அந்த நகரின் செல்­வங்­களை கொள்­ளை­யிட்­டவர். துரோகம் என்­பது அஸாத்தின் இரத்­தத்தில் மிக ஆழ­மாக ஊறிப் போய் உள்­ளது.

தந்­தைக்குப் பின் ஆட்­சியை அப­க­ரித்துக் கொண்ட மகன் அஸாத், இஸ்­ரே­லுக்கு எதி­ராக ஒரு துப்­பாக்­கி­ர­வையைக் கூடப் பயன்­ப­டுத்­தாமல் மிக நீண்­ட­ கா­ல­மா­க ­ஆட்சிக் கதி­ரை­யை­ அ­லங்­க­ரித்த வண்ணம் உள்ளார். அதனால் தான் அவர் பத­வி­வி­லக வேண்டும் என்­று­மு­டிவு கூட வீட்டோ அதி­கா­ரத்தால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

ஐக்­கிய அரபு அமீ­ரகம் புரட்­சிக்கு எதி­ரான இயக்­கத்தின் மத்­திய நிலை­ய­மா­க­ உள்­ளது. இஸ்­ரேலின்  மொஸாட் உள­வுத்­துறை இந்­த ­ஆட்­சியைத் தக்­க­வைத்துக் கொள்ள பக்­க­ப­ல­மாக உள்­ளது.

சிரியா, லிபியா மற்றும் குறிப்­பாக யெமன் ஆகி­ய­நா­டு­களில் ஏற்­பட்ட­ அ­ரபு வசந்தம் அமீ­ர­கத்தில் இருந்­துதான் இரத்தக் கரை­ப­டிந்த இளை­யுதிர் கால­மாக மாற்­றப்­பட்­டது. அடிப்­படை உரி­மை­க­ளுக்­காக, சுய கௌர­வத்­துக்­காக, சுதந்­தி­ரத்­துக்­காக அல்­லது ஜன­நா­யத்­துக்­காக யாரா­வது ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டால் அல்­லது ஈடு­பட நினைத்தால் அவர்­க­ளுக்கு அச்­சத்தை ஊட்டி கசக்கிப் பிழி­வ­துதான் இதன் அடிப்­ப­டை­நோக்கம்.

இஸ்ரேல் ஆத­ரவு அமெ­ரிக்கா, சவூதி அரே­பியா, மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரகம் என்­பன சிரிய புரட்­சிக்கு எதி­ராக கிளர்ந்து எழுந்­தன. சிரிய மக்கள் பாரிய தியா­கங்­களைப் புரிந்­தனர். காரணம், எல்­லோ­ருமே தரை­மட்­டத்­துக்கு நசுக்­கப்­பட்­டனர். அருகில் இருந்தும் தூரத்தில் இருந்தும் சர்­வ­தேசக் கழு­குகள் சிரி­ய ­மக்­களின் உடல்­களைக் கிழித்து எறிந்­தன. உயிர் ­தப்­பினால் போதும் என்ற நிலையில் எந்த வழி­யி­லா­வது நாட்­டை­விட்­டு­தப்பி ஓட முயன்­றனர். அவ்­வா­றான முயற்­சி­களில் சிறு­வர்கள் உட்­பட பலர் கட­லுக்கும் பலி­யானர்.

சிரி­ய பு­ரட்­சி ­கா­ர­ண­மாக அந்­த­ நாட்டின் நண்­பர்கள் என முன்னர் தம்மை இனம் காட்டிக் கொண்ட பலரும் கூட அந்த மக்­களை கைவிட்­டனர். ஆனால் எஞ்­சி­யதில் இருந்து தங்­க­ளது பங்­கு­களை மட்டும் அவர்கள் கொள்ளை அடித்துக் கொள்ளத் தவ­ற­வில்லை பாதிக்­கப்­பட்ட மக்கள் இப்­போது தம்மை படைத்­தவன்  மீது முழுப் பாரத்­தையும் ஒப்­ப­டைத்­து­விட்­டனர்.

போராட்­டத்தின் போது ஆயு­தங்­களை வழங்கி தம்­மை­ ஆ­த­ரித்­த­வர்­க­ளை­ அ­வர்கள் நம்­பினர். ஆனால், அந்த நாடுகள் இப்­போது பிராந்­தி­ய­ந­லன்­க­ளுக்­காக சிரிய மக்­க­ளுக்கு முழு­மை­யாக துரோகம் இழைத்­து­விட்­டன. தாரா, அலப்போ, ஹொம்ஸ், ஹமா ஆகிய இடங்­களில் இந்த நிலையை வெளிப்­ப­டை­யாகக் காண­மு­டி­கின்­றது.

சிரியா இவ்­வாறே தன­து­ நேச அணி­க­ளையும், உற­வு­க­ளையும் காட்டிக் கொடுத்து துரோகம் இழைத்­துள்­ளது. இருந்­தாலும் இந்தக் கதை­இன்னும் முடி­ய­வில்லை. இதன் முடிவு இன்னும் எழு­தப்­ப­ட­வில்லை. யுத்­தங்­களைப் போலவே புரட்­சி­க­ளுக்கும் தீர்க்­க­மான முடி­வு­க­ளுக்கு வரு­கின்­ற­ அந்­த­நொடிப் பொழு துவ­ரை­ஏற்ற இறக்கம் இருக்­கவே செய்யும். பஷர் அல் அஸாத்தின் நீடிக்கும் ஆட்­சியும் கொண்­டாட்­டங்­களும் மக்­களை ஏமாற்­றாமல் இருக்­கட்டும்.

சுதந்­திர சிரி­யாவை நேசிக்கும் ஒவ்­வொரு சிரியா பிர­ஜையின் இத­யத்­துக்­குள்ளும் புரட்­சியின் தீக்கதிர்கள் இன்னமும் எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை சரியாக ஒருங்கிணைக்கப்பட்டு மூட்டப்படும் வரை அவர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவ்வாறு காத்திருப்பவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளாள் அதற்கான நாள் என்பது மிக அண்மையில் இருக்கலாம். அதேவேளை, இப்போது காயப்பட்டு, நோய்வாய்ப்பட்டுள்ள சிரியாவை மீண்டும் ஒரு கசாப்புக் கடைக்காரன் தழுவிக் கொள்ளப் போகிறான்.

சுமார் 12 வருடங்கள் கழித்து இன்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 90 சதவீதத்துக்கும் அதிகமான சிரிய மக்கள் பட்டினி கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளது. 15 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. கடந்த பல வருடங்களாக இதே நிலைதான் அங்கு நீடித்துள்ளது. சிரியாவின் உள்கட்டமைப்பு முழுமையாக சரிந்துவிழும் ஆபத்து அவசர கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது என்று செஞ்சிலுவை சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்களமயமாக்கலும் தொல்லியல் திணைக்களமும் : 2026இன்...

2026-03-05 11:58:28
news-image

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் கைதும்...

2026-03-05 11:39:14
news-image

இலங்கையின் சனத்தொகை மாற்றம் எதிர்கால மனிதவளச்...

2026-03-04 12:02:41
news-image

இறந்தவர்களை மறக்க முடியவில்லை

2026-03-03 12:35:17
news-image

ஈரானின் பாதுகாப்பு பலவீனங்களும் காமேனியின் இறுதி...

2026-03-03 11:40:52
news-image

ஈரான் உச்ச தலைவர் அலி காமனெயி...

2026-03-03 10:55:15
news-image

ஆசியாவில் பொருளாதார நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள மத்திய...

2026-03-03 10:32:52
news-image

அழுத்தம், பதற்­றத்தை குறைத்து மன உறு­தியை...

2026-03-02 10:39:34
news-image

ஆசிய பொருளாதாரத்தை உலுக்கும் ஹோர்முஸ் நீரிணையின்...

2026-03-02 09:56:01
news-image

ஏமாற்­றிய அர­சாங்கம்

2026-03-01 16:09:58
news-image

இலங்­கையில் அமெ­ரிக்­காவின் எதிர்­பார்ப்பு

2026-03-01 16:07:10
news-image

ஆணி அடிக்க அலவாங்கு எதற்கு?

2026-03-01 13:53:56