கரை தட்டிய இந்திய கப்பலை மீட்டுச் செல்ல பிரிதொரு கப்பல் நாட்டிற்கு வருகை

Published By: Digital Desk 3

08 Jul, 2023 | 03:09 PM
image

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி,பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் கரை தட்டிய கப்பலை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை (8) மாலை வருகை தர உள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி  கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (7) மாலை கரை தட்டி உள்ளது.

இதன்போது,  குறித்த கப்பலில் 11 பணியாளர்கள் இருந்ததாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் குறித்து இந்தியாவின் கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும்,கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கமைவாக குறித்த நிறுவனமும் கடற்படையும்,சமுத்திரவியல் சேவை மற்றும் மீட்புப் பணியகம் ஆகியவை இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை கொண்டு சென்ற பாஜ் என அழைக்கப்படும்  கொள்கலன் தாங்கி  மீண்டும் கப்பல் ஒன்றின் மூலம் இந்தியாவை நோக்கி கொண்டு சென்ற போதே இலங்கை கடற்பரப்பில் கரை தட்டியது.

87 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கொள்கலன் தாங்கி எந்த வித பொருட்களும் அற்ற நிலையில் கப்பல் மூலம் இழுத்து வரப்பட்டது.

இதன் போது கடல் பிராந்தியத்தில் வீசிய கடும் காற்று, அலையின் சீற்றம் காரணமாக குறித்த கப்பல் மற்றும் கொள்கலன் தாங்கி ஆகியவை இலங்கை கடற்பரப்பை நோக்கி இழுத்து வரப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் 87 மீற்றர் நீளம் கொண்ட கொள்கலன் ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்திய கப்பல் ஒன்று இன்று மாலை இலங்கையை வந்தடைய உள்ளது.

குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்த பின்னரே எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தீர்மானிக்கலாம் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56
news-image

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில்...

2025-02-15 15:38:56
news-image

புறக்கோட்டையில் ஐஸ், கொக்கெய்ன் போதைப்பொருட்களுடன் இளைஞன்...

2025-02-15 15:41:26
news-image

மாணவர்கள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை...

2025-02-15 14:45:49