ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்...

Published By: Ponmalar

08 Jul, 2023 | 01:28 PM
image

புகை பிடித்தலையும், மது அருந்துவதையும், இன்றைய இளைய தலைமுறையினர் (பெண்கள் உட்பட) நவீன வாழ்வியல் பண்பாடாக கருதுகிறார்கள்.

மேலும், இளைய சமுதாயம் பார்ட்டி என்ற பெயரில் ஜங்க் புட் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர் பானங்களை அதிகம் உட்கொள்கிறார்கள். இவை அனைத்தும் சிறுவயது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரோல் அளவிற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் நேரடி சம்பந்தம் உண்டு. 

குறிப்பாக, கெட்ட கொலஸ்ட்ரோல் எனப்படும் எல்.டி.எல். ரத்தத்தில் அதிகம் இருப்பது ஆபத்தானது. இவை இருதய ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும். எனவே, ரத்தத்தில் கொலஸ்ட்ரோல் அதிகம் இருந்தால், நல்ல உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, தகுந்த மாத்திரை போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டும். 

வாகனம் வைத்துள்ளவர்கள் தங்கள் வாகனங்களை ஆறுமாதத்திற்கு ஒருமுறை பரிசோதித்து பராமரிக்கின்றனர். ஆனால், ஏனோ தங்களின் உடலை வருடத்திற்கொருமுறை பரிசோதித்து கொள்ள பெரிதும் தயக்கம் கொள்கின்றனர். இந்த நிலை மாறி ஒவ்வொருவரும் நம் உடலையும் அவ்வப்போது பரிசோதித்து, வள்ளுவன் சொன்ன வழியில் உணவே மருந்தென உட்கொள்வதும், மது மற்றும் புகைப் பழக்கத்தை விடுத்தலும், உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியத்தை பராமரித்தலும் ஹார்ட் அட்டாக்கிலிருந்து விலக்கி வைக்கும். நெஞ்சு வலி (மார்பின் மத்தியில் அழுத்தம்), இடது கைக்கும் தாடை பகுதிக்கும் வலி பரவுதல், அதிக வியர்வை, மயக்கம், மூச்சு திணறல் போன்றவை மாரடைப்பு வந்தவுடன் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். 

30 சதவீதம் இருதய நோயாளிகளுக்கு (குறிப்பாக முதியோர், நீரிழிவு நோய் உள்ளவர்கள்) மாரடைப்பு வரும்போது எந்த ஆரம்ப அறிகுறிகளும் தெரிவதில்லை - இதை 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' என்று கூறுவார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10