பொதுஜன பெரமுனவின் உறுப்பினரே ஜனாதிபதி வேட்பாளர் - சாகர காரியவசம்

Published By: Nanthini

08 Jul, 2023 | 01:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்பது ஆளும் தரப்பு உறுப்பினர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதால் எமது கட்சியின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது. கட்சி என்ற ரீதியில் முன்னேற்றமடையும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைச்சரவைக்குள் இருந்தவர்களே பலவீனப்படுத்தினார்கள்.

அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தி அதனூடாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் அருகில் இருந்தவர்கள் வகுத்த சூழ்ச்சியை நாங்கள் தோற்கடித்தோம்.

பொதுஜன பெரமுனவில் இருந்து சந்தர்ப்பவாதிகள் வெளியேறியுள்ளார்கள். கட்சியை முழுமையாக மறுசீரமைத்துள்ளோம். நாடளாவிய ரீதியில் மக்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம். மக்கள் ஆதரவுடன் மீண்டும் வலுப்பெறுவோம்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது ஜனாதிபதி வேட்பாளர் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானமல்ல.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரை அறிவிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்காகவேனும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும்...

2024-07-15 17:55:06
news-image

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு -...

2024-07-15 21:05:05
news-image

நிறைவிற்குக் கொண்டுவரப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி...

2024-07-15 20:59:03
news-image

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு...

2024-07-15 20:40:53
news-image

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தினால்...

2024-07-15 17:54:13
news-image

இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட தாராதேவி சிலை...

2024-07-15 17:46:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது

2024-07-15 20:45:10
news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில்...

2024-07-15 20:47:44
news-image

இங்கிரியவில் கெப் வாகனம் மோதி பாதசாரி...

2024-07-15 18:23:15
news-image

மின்கட்டண குறைப்பு - முழுமையான விபரங்கள்...

2024-07-15 20:32:40
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-07-15 18:22:04
news-image

கொள்ளுப்பிட்டியில் விபத்து ; புதுமண தம்பதிகள்...

2024-07-15 18:15:13