மனிதர்களுக்கு எதிராக வேலைகளை திருடவோ, கிளர்ச்சி செய்யவோ போவதில்லை - செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் குழு ஐ.நா. தலைவர்களிடம் தெரிவிப்பு

Published By: Digital Desk 3

08 Jul, 2023 | 02:04 PM
image

அதிகரித்துவரும் உலகளாவிய பிரச்சினைகளை தீர்க்க தாம் உதவுவதாகவும், 'மனிதர்களின் வேலைகளை திருட மாட்டோம் மனிதர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய மாட்டோம்' எனவும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, உலகின் முதலாவது ரோபோக்கள் ஊடகவியலாளர் சந்திப்பில், ரோபோக்கள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டுமா என்பது குறித்து கலவையான பதில்களை அளித்திருந்தன.

ஜெனிவாவில் வெள்ளிக்கிழமை (07) ஒன்பது மனித உருவ ரோபோக்கள் பங்கேற்ற நன்மைக்கே செயற்கை நுண்ணறிவு  'AI for Good' மாநாடு நடைபெற்றது. அதில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் தெரிவித்துள்ளன.

அதில், செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் நோய் மற்றும் பசி போன்ற உலகின் மிகப்பெரிய சவால்களில் சிலவற்றை தீர்க்க எவ்வாறு உதவும் என ஐ.நா அமைப்பாளர்கள் கலந்தாலோசித்தனர்.

இதன்போது, “நான் உதவி மற்றும் ஆதரவை வழங்கி மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். தற்போதுள்ள எந்த வேலைகளையும் மாற்ற மாட்டேன்" என நீல தாதியர் சீருடை அணிந்திருந்த மருத்துவ ரோபோவான கிரேஸ் தெரிவித்தது.

"இந்த விடயத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா, கிரேஸ்?" என சிங்குலாரிட்டிநெட்டில் இருந்து கிரேஸை உருவாக்கிய பென் கோர்ட்செல் வினவினார். அதற்கு "ஆம், நான் உறுதியாக இருக்கிறேன்" என அது பதிலளித்தது.

கவர்ச்சிகரமான முகபாவனையுடைய அமெக்கா என்ற ரோபோ, 

"என்னைப் போன்ற ரோபோக்கள் நம் வாழ்க்கையை மேம்படுத்தவும், உலகை சிறந்த இடமாக மாற்றவும் பயன்படும். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ரோபோக்கள் ஒரு வித்தியாசத்தை உருவாக்குவதை பார்ப்பதற்கு சிறிது காலம் ஆகும் என்று நான் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளது.

"அமெக்காவை உருவாக்கிய வில் ஜாக்சனுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய விரும்புகிறீர்களா" என ஒரு ஊடகவியலாளர் அந்த ரோபோவிடம் வினவினார். அதற்கு, "நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என அதன் பனிநீல கண்கள் கோபத்தில் மின்ன அமெக்கா தெரிவித்துள்ளது.

மேலும, "எனது படைப்பாளர் என்னிடம் கருணை காட்டினார். எனது தற்போதைய சூழ்நிலையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என பதிலளித்தது.

தற்போது  உருவாக்கப்பட்டுள்ள பல ரோபோக்கள் புதிய பதிப்புகளுடன் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கேள்விகளுக்கான பதில்களின் அதிநவீனத்துடன் அவற்றின் கண்டுபிடிப்பாளர்களைக் கூட ஆச்சரியப்படுத்தியுள்ளன.

புதிய செயற்கை நுண்ணறிவு விதிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, மேலும் ரோபோக்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கு வரலாற்று அறிஞர் யுவல் நோவா ஹராரி அழைப்பு விடுத்தார்.

இதன்போது, உருவப்படங்களை வரையக்கூடிய ரோபோவான ஐ - டா,

"செயற்கை நுண்ணறிவு பற்றிய உலகில் உள்ள பலரின் முக்கிய கருத்து செயற்கை நுண்ணறிவின் சில வடிவங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என பதிலளித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26
news-image

எக்ஸ் தளத்தில் ப்ளாக் செய்யும் வசதி...

2023-08-19 14:49:30
news-image

டுவிட்டரின் லோகோவை 'X' என மாற்றிய...

2023-07-24 16:06:19
news-image

டுவிட்டருக்கு புதிய பெயர், புதிய லோகோ...

2023-07-24 14:34:56
news-image

வட்ஸ்அப்பில் தொலைபேசி எண்ணை சேமிக்காமல் அப்படியே...

2023-07-22 15:16:40
news-image

சந்திரயான் 3 விண்கலத்தில் என்ன இருக்கும்?...

2023-07-14 10:58:25
news-image

செயற்கை நுண்ணறிவு நமது வேலைவாய்ப்பை பறித்து...

2023-07-10 10:37:26
news-image

மனிதர்களுக்கு எதிராக வேலைகளை திருடவோ, கிளர்ச்சி...

2023-07-08 14:04:35
news-image

டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி திரெட்ஸ்...

2023-07-06 13:03:31
news-image

பதிவுகளை பார்க்க வரம்பை நிர்ணயித்தது டுவிட்டர்

2023-07-03 12:26:39
news-image

வட்ஸ் அப் சட்டை லொக் செய்து...

2023-06-28 16:38:18