தங்கத்தின் இறக்குமதி வரியில் 7.5 சதவீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனால் இவ்வருடத்தில் தங்கத்தில் விலை வீழ்ச்சியடையுமென தேசிய தங்க நகை அதிகாரசபையின் முகாமையாளர் சிறிசந்திர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பவுன் ஒன்றின் விலை 4,000 முதல் 5,000 ரூபாய் வரையில் குறைவடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.