(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தோட்டங்களில் உள்ள வீடுகளுக்கு முகவரி வழங்கப்படாமல் இருப்பது அவர்களின் அடிப்படை உரிமை பிரச்சினையாகும். அதனால் தோட்ட மக்களின் வீடுகளுக்கு வீட்டு விலாசம் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு தோட்ட அதிகாரிகாரசபை மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கடமையாகும். என்றாலும் அந்த மக்களின் நீண்டகால இந்த பிரச்சினையை விரைவாக தீர்த்துவைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற மலையக மக்களின் வாழ்வு நிலை மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தோட்டபுறங்களின் வீடுகளுக்கு வீட்டு விலாசம் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு தோட்ட கம்பனிகளின் கடமையாகும். தோட்ட மக்களுக்கு வரும் கடிதங்கள் தோட்ட காரியாலயங்களுக்கு வழங்கப்பட்டு, அது பின்னர் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால் கடிதங்கள் காணாமல் போகும் நிலையும் இடம்பெறுகிறது. அதனால் இந்த மக்களின் வீடுகளுக்கு வீட்டு முகவரி வழங்கும் பொறுப்பு தோட்ட அதிகாரிகாரசபை மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உடகபட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கடமையாகும்.
அத்துடன், தோட்டங்களின் வீடுகளுக்கு முறையான முகவரி இல்லாதமையாமல் அவர்களுக்கு போய் சேரவேண்டிய முக்கிய கடிதங்கள் உரிய நேரத்துக்கு கிடைக்கதில்லை. அதனால் நேரமுகப்பரீட்சை போன்ற பல முக்கியமான நிகழ்வுகளுக்கு அவர்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
அதேநேரம் இவ்வாறு தோட்ட காரியாலயத்துக்கு வந்த கடிதம் கிடைக்கவில்லை என தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றும் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டடிருக்கிறது.
இவ்வாறு பல பிரச்சினைகளை தோட்ட மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண இன்று (நேற்று) காலையும் செயலாளருடனும் பிரதமருடனும் கலந்துரையாடினேன். இந்த பிரச்சினை நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் விடயமாகும். என்றாலும் இதனை விரைவாக தீர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தோட்ட வீடுகளுக்கு முகவரி வழங்கப்படாமை தொடர்பில் தோட்ட அதிகாரசபையிடம் கேட்டால், இவர் தோட்டத்தில் பலவந்தமாக தங்கி வருகிறார். முறையாக வேலைக்கு வருவதில்லை. அதனால் வழங்கவில்லை என பதிலளிக்கிறார்கள். அந்த மக்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருக்கும் போது , நீர் மற்றும் மின்சாரம் அடிப்படை உரிமை.
அதனால் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என் நாங்கள் தெரிவித்தபோது மின்சாரம் வழங்கினார்கள். அதேபோன்று மக்களுக்கு முகவரி ஒன்றை வழங்குவதும் அவர்களின் உரிமையாகும். அதனால் தோட்ட மக்களின் வீடுகளுக்கு முகவரி ஒன்றை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை தற்போது மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM