நாட்டில் நாளொன்றுக்கு குறைந்தது ஒரு யானை உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றாடல் துறை நிபுணர் தெரிவித்துள்ளார்.
சுரங்கங்களை அகழ்தல் என்ற போர்வையில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் புராதன தொல்பொருட்களை அகழ்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் காடுகளில் தோண்டப்பட்ட பெரும்குழிகள் காரணமாக பெருமளவு யானைகள் உட்பட வனவிலங்குகள் அதற்குள் விழுந்து உயிரிழக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பெரும்குழிகள் குறைந்தது 10 அடி ஆழமும் ஐந்து அடி அகலமும் கொண்டன எனவும், வனப்பகுதிகளின் எல்லையோரங்களிலே பெரும் குழிகளை தோண்டியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பெரும்குழிகள் பெரும்பாலானவை கடந்த அரசாங்கத்தால் தோண்டப்பட்டவை எனவும், எமது சங்கம் அச் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டதுடன் அவற்றின் பாதிப்புக்களை சுட்டிக்காட்டியதாகவும் சுற்றாடல் துறை நிபுணர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM