வளங்கள் இருந்தும் எமக்கு உரிமையும் இல்லை அதிகாரமும் இல்லை - சாணக்கியன்

Published By: Vishnu

07 Jul, 2023 | 03:29 PM
image

எமக்கும் எமது வட கிழக்கு மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு அதற்கான அதிகாரங்களை வழங்குவார்கள் எனில் எம்மாலும் குறிப்பிட்ட சில காலங்களுக்குள் எம்மாலும் பாரிய அபிவிருத்திகளை உருவாக்க முடியும் என்பதனை எமது நாட்டின் அரசுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம். இதனையே எமது கட்சியான தமிழரசுக் கட்சியும் காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

இங்கு குறிப்பாக எமது நாட்டில் நடக்கும் சட்டவிரோத மண் அகழ்வு பற்றியும் கவனத்தில் கொண்டு சென்றிருந்தேன். என்றார்.

காலநிலை மாற்றம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை பிரச்சினைகளில் தொடர்புடைய பங்குதாரர்களிடையே ஓர் புரிதலை உருவாக்கும் விதத்தில் T20 என்னும் அமைப்பினால் இந்தியாவில் மேகல்யா என்னும் நகரத்தில் நடாத்தப்பட்ட செயலமர்வில்  விசேட அழைப்பின் பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் இரா சணக்கியனும் இதில் கலந்துகொண்டிருந்தார். 

இதன் போது சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதன்போது காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எதிர்கால சந்ததியினருக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.

இலங்கையும் இவ்வாறனதொரு காலநிலை மாற்றம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குவதாக இருந்தால் எமது மக்களில் சில வாழ்வாதார நடவடிக்கைகள் தாக்கம் செலுத்துவதாக இருப்பினும் அதற்கான மாற்று திட்டத்தை கரிசனையில் கொள்வதன் மூலம் நாமும் எதிர்வரும் காலங்களில் காலநிலை மாற்றத்திற்கான ஒத்துழைப்பை வழங்கமுடியும். மேகல்யா எனப்படும் இவ் மாநிலம் 70 களில் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த மாநிலம் அங்கு காணப்படும் வளங்களை கொண்டு மிகவும் அபிவிருத்தி அடைந்த இடமாக காணப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27