வீதியை கடக்க காத்திருந்த சிறுவனை மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி, பளை பகுதியில் வீதியை கடக்க காத்திருந்த சிறுவனை மோதித் தள்ளிய சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
கிளிநொச்சி பளை முல்லையடி பகுதியில் புதன்கிழமை (05) பகல் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடப்பதற்காக காத்திருந்த சிறுவனை வேகமாக வந்த கப்ரக வாகனம் மோதி தள்ளியது.
குறித்த சம்பவத்தின் போது வீதியில் காத்திருந்த சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார் .
விபத்தை ஏற்படுத்திய சாரதி விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில் வியாழக்கிழமை (06) பளைப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன .
இன்றைய தினம் சம்பவத்துடன் தொடர்புபட்ட சாரதியை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM