இந்து சமுத்திர பிராந்தியத்தில் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இந்தியாவுடன் நெருக்கமாக செயற்படுகின்றோம் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Published By: Digital Desk 3

07 Jul, 2023 | 09:33 AM
image

(எம்.மனோசித்ரா)

இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிகரித்துள்ள ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளை கட்படுத்துவதற்கான இந்தியாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வருகின்றோம். இதற்கு பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய பாதுகாப்பும் , சட்டவாட்சியும் நடைமுறைப்படுத்தப்படாத ஒரு நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது. எனவே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய அடுத்த 5 வருடங்களில் தேசிய பாதுகாப்பில் செல்வாக்கு செலுத்தக் கூடிய பிரதானிகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பயங்கரவாதம், அடிப்படைவாதம், திட்டமிட்ட குற்றச் செயல்கள், சைபர் தாக்குதல்கள் மற்றும் பூகோள அரசியல் மாற்றம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2009 யுத்தம் நிறைவடைந்த சந்தர்ப்பத்திலும், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் முப்படையினரின் எண்ணிக்கையை வரையறுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது முப்படையில் 2 இலட்சத்து 8000 வீரர்கள் உள்ளனர். தற்போதுள்ள முப்படை வீரர்களை நீக்காது, புதிய உள்வாங்கல்களை வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர பாதுகாப்பு

கடல்சார் சட்ட விரோத நடவடிக்கைகளில் இந்து சமுத்திரம் பிரதான இடத்தை வகிப்பதாக தெரியவந்துள்ளது. ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவை இந்து சமுத்திரத்தில் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினருடன் இணைந்து விசேட சுற்றுவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பன இந்து சமுத்திரத்தில் நாம் எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நூற்றுக்கு 100 வீதம் வெற்றியளிக்காது. இதனை எம்மால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும். அதற்கமைய இந்திய அரசாங்கத்துடன் இது தொடர்பில் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றோம்.

ஸ்ரீலங்கா டெலிகொம்

ஸ்ரீலங்கா டெலிகொம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கை விஞ்ஞானபூர்வமானதல்ல. 65 சதவீத தொலைபேசி தொடர்புகள் டெலிகொம் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படுவதில்லை. தனியார் நிறுவனத்திடமே அது காணப்படுகிறது. எனவே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த நிறுவனத்தின் உரிமம் எம்வசமே இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. சட்டங்கள் ஊடாக அதனை எம்மால் முகாமைத்துவம் செய்ய முடியும். அத்தோடு அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கையாகும். அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ்மா அதிபர் நியமனம்

எந்தவொரு உயர் நியமனத்திலும் ஒவ்வொருவரது தேவைகளுக்கு ஏற்ப அரசாங்கம் செயற்படுவதில்லை. அரசாங்கத்துக்கென கொள்கையொன்று காணப்படுகிறது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மதிப்பீட்டுக்கமையவே அவை முன்னெடுக்கப்படும். இவ்விடயத்தில் எவரது அழுத்தங்களுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை. எதிர்வரும் சில தினங்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்.

காணி விடுவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் 80 வீதமான காணிகள் அங்குள்ள மக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. வடக்கிலும் , தெற்கிலும் இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன. பாதுகாப்பு தொடர்பான ஆய்வொன்றை முன்னெடுக்காமல் எந்தவகையிலும் அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அமைவிடம், முக்கியத்துவம், பாதுகாப்பு என்பவற்றின் அடிப்படையிலேயே உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதனை விடுத்து எவரையும் சந்தோஷப்படுத்துவதற்காக நாம் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் மக்களின் காணிகளை பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்காமல் உரியவர்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் மதிப்பீடு செயற்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காணி விடுவிப்புக்கள் முன்னெடுக்கப்படும்.

அநாவசியமாக பாதுகாப்பு

விகாரைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத்தலங்களில் அநாவசியமாக பாதுகாப்பு அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவைக்கேற்ப பாதுகாப்பு நிலைமைகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 

தேசிய மாணவர் படையணி

தேசிய மாணவர் படையணியில் தற்போது ஒரு இலட்சத்து 40,000 பேர் உள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்தவர்களில் 10,000 பேர் மாத்திரமே காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. எனவே தேசிய மாணவர் படையணியில் 20 சதவீதமான பங்களிப்பினை வடக்கு , கிழக்கிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளோம். மேலும் வடக்கில் பாடசாலைகளில் சமூக புலனாய்வு பிரிவினை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58