டி லீட் அற்புதமான சகலதுறை ஆட்டம் : உலககக் கிண்ண வாய்ப்பை உறுதிசெய்தது நெதர்லாந்து

07 Jul, 2023 | 06:08 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்கொட்லாந்துக்கு எதிராக புலாவாயோ, குவீன்ஸ் பார்க் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் அபார வெற்றியீட்டிய நெதர்லாந்து, இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண பிராதான சுற்றில் விளையாட 2ஆவது அணியாக தகுதிபெற்றது.

இதற்கு அமைய ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முதலாம், இரண்டாம் இடங்களைத் தீர்மானிக்கவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கையும் நெதர்லாந்தும் விளையாடவுள்ளன.

பந்துவீச்சில் பாஸ் டி லீட்  தனத முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி கன்னிச் சதம் குவித்து நெதர்லாந்தின் வெற்றியை உறுதிசெய்து ஆட்டநாயனானார்.

ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 278 ஓட்டங்களை 44 ஓவர்களில் கடந்தால் மாத்திரமே உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற முடியம் என்ற நிர்ப்பந்தத்திற்கு மத்தியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 42.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்தது.

ஸ்கொட்லாந்திடம் தோல்வி அடைந்த ஸிம்பாப்வே, முன்னதாக நெதர்லாந்தை வெற்றிகொண்டிருந்தது. இப்போது ஸ்கொட்லாந்தை நெதர்லாந்து வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

அப் போட்டியில் ப்றெண்டன் மெக்முலென் சதம் குவித்து ஸ்கொட்லாந்தைப் பலப்படுத்தியிருந்தபோதிலும் பாஸ் டி லீட் குவித்த அதிரடி சதம் அதனை விஞ்சுவதாக அமைந்தது.

நெதர்லாந்து முதல் 25 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது அதன் ஓட்ட வேகம் ஓவருக்கு 4.72 ஓட்டங்களாக இருந்தது.

இதன் காரணமாக ஸ்கொட்லாந்து வெற்றிபெற்று விடும் என கருதப்பட்டது.

ஆனால், அடுத்த 17.2 ஓவர்களில் 160 ஓட்டங்களைக் குவித்த நெதர்லாந்து அபார வெற்றியீட்டி ஸ்கொட்லாந்தை அதிர்ச்சிக்குள்ளாகியது.

அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸுடன் 5 ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களையும் சக்கிப் ஸுல்பிகாருடன் 6ஆவது விக்கெட்டில் 69 பந்துகளில் 113 ஓட்டங்களையும் பகிர்ந்த பாஸ் டி லீட் நெதர்லாந்தின் வெற்றியை இலகுவாக்கினார்.

பாஸ் டி லீட் 92 பந்துகளில் 7 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 123 ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது அநாவசியமாக ரன் அவுட் ஆனார்.

நெதர்லாந்து துடுப்பாட்டத்தில் அனைவரும் தங்களாலான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

விக்ரம்ஜித் சிங் (40), மெக்ஸ் ஓ'டவ்ட் (20) ஆகிய இருவரும் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும் அவர்களும் வெஸ்லி பரேசி (11), டேஜா நிடாமனூரு (10) ஆகியோரும் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

எவ்வாறாயினும் அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (25), சக்கிப் ஸுல்பிகார் (33) ஆகிய இருவரும் பாஸ் டி லீடுக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

ஸ்கொட்லாந்து பந்துவீச்சில் மைக்கல் லீஸ்க் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பிரதான பந்துவீச்சாளர் கிறிஸ் சோல் சிறப்பாக பந்துவீசிய போதிலும் அவரை அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் முழுமையாகப் பயன்படுத்தாதது ஆச்சரியத்தைக் கொடுத்தது. 7.5 ஓவர்கள் மாத்திரம் வீசிய சோல் 39 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்தது.

ப்றெண்டன் மெக்முலென் குவித்த அபார சதமும் அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் பெற்ற அரைச் சதமும் ஸ்கொட்லாந்து கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவின. ஆனால், பின்னர் அவர்களது முயற்சிகள் வீண்போயின.

15ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது ஸ்கொட்லாந்தின் மொத்த எண்ணிக்கை 64 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் ப்றெண்டன் மெக்முலென், ரிச்சி பெரிங்டன் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 137 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

110 பந்துகளை எதிர்கொண்ட ப்றெண்டன் மெக்முலென் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 106 ஓட்டங்களைப் பெற்றார். 15ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய மெக்முலென் பெற்ற 2ஆவது சதம் இதுவாகும்.

அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய ரிச்சி பெரிங்டன் 64 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட ஆரம்ப வீரர் கிறிஸ்டோபர் மெக்ப்றைட் 32 ஓட்டங்களையும் மத்திய வரிசை வீரர்களான தோமஸ் மெக்கின்டோஷ் ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களையும் கிறிஸ் க்றீவ்ஸ் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட்ஸ் 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரெயான் க்ளெய்ன் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

தனது 30ஆவது போட்டியில் விளையாடிய   டி லீட்ஸ் முதல் தடவையாக 5 விக்கெட் குவியலுடன் சிறந்த பந்துவீச்சப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோசமான நிலையிலிருந்த இலங்கையை அரைச் சதங்களுடன்...

2024-09-07 23:02:17
news-image

ஒல்லி போப் ஆபார சதம், டக்கட்...

2024-09-06 23:50:06
news-image

மகாஜனாவுக்கும் ஸ்கந்தவரோதயவுக்கும் இடையிலான 22ஆவது வருடாந்த...

2024-09-06 19:46:33
news-image

வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா...

2024-09-06 18:27:27
news-image

பெண்களுக்கான பராலிம்பிக் நீளம் பாய்தலில் இலங்கையின்...

2024-09-06 16:39:22
news-image

இலங்கை - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்...

2024-09-06 16:03:44
news-image

நியூஸிலாந்தின் சுழல்பந்துவீச்சு பயிற்றுநரானார் இலங்கையின் ரங்கன...

2024-09-06 14:00:55
news-image

மகாஜனா - ஸ்கந்தவரோதயா மோதும் யாழ்....

2024-09-06 12:49:53
news-image

நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கவுள்ள இலங்கை...

2024-09-06 06:22:47
news-image

இலங்கை - கம்போடியா AFC ஆசிய...

2024-09-06 06:23:03
news-image

பெட்ரோல் ஊற்றி கொழுத்திய முன்னாள் காதலன்...

2024-09-05 13:47:18
news-image

கம்போடியாவுடனான போட்டியுடன் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்தாட்டத்தையும்...

2024-09-05 11:55:15