(நெவில் அன்தனி)
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையுடன் தகுதிபெறப்போகும் இரண்டாவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 போட்டியில் நெதர்லாந்துக்கு கடினமான 278 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை ஸ்கொட்லாந்து நிர்ணயித்துள்ளது.
இந்த வெற்றி இலக்கை 44 ஓவர்களுக்குள் கடந்தால் மாத்திரமே உலகக் கிண்ண போட்டியில் பங்குபற்ற நெதர்லாந்து தகுதிபெறும். அல்லது உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற ஸ்கொட்லாந்து தகுதிபெறும்.
புலாவாயோ, குவீன்ஸ் பார்க் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (06) நடைபெற்றுவரும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான |சுப்பர் 6 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்தது.
ப்றெண்டன் மெக்முலென் குவித்த அபார சதமும் அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் பெற்ற அரைச் சதமும் ஸ்கொட்லாந்துக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவின.
15ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது ஸ்கொட்லாந்தின் மொத்த எண்ணிக்கை 64 ஓட்டங்களாக இருந்தது.
இந் நிலையில் ப்றெண்டன் மெக்முலென், ரிச்சி பெரிங்டன் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 137 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
110 பந்துகளை எதிர்கொண்ட ப்றெண்டன் மெக்முலென் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 106 ஓட்டங்களைப் பெற்றார். 15ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் மெக்முலென் பெற்ற 2ஆவது சதம் இதுவாகும்.
அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய ரிச்சி பெரிங்டன் 64 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்களை விட ஆரம்ப வீரர் கிறிஸ்டோபர் மெக்ப்றைட் 32 ஓட்டங்களையும் மத்திய வரிசை வீரர்களான தோமஸ் மெக்கின்டோஷ் ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களையும் கிறிஸ் க்றீவ்ஸ் 18 ஒட்டங்களையும் பெற்றனர்.
நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட்ஸ் 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரெயான் க்லெய்ன் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
தனது 30ஆவது போட்டியில் விளiயாடும் டி லீட்ஸ் முதல் தடவையாக 5 விக்கெட் குவியலுடன் சிறந்த பந்துவீச்சப் பெறுதியைப் பதிவுசெய்தார்.
தற்போது 278 ஒட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி .இலக்கை நோக்கி நெதர்லாந்து துடுப்பெடுத்தாடுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM