எலான் மஸ்கின் டுவிட்டர் சமூக வலைதளம் பல்வேறு கெடுபிடிகள் காரணமாக பொலிவிழந்து வரும் சூழலில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் கணக்கின் வழியாக பயன்படுத்த திரெட்ஸ் (Threads) என்ற ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
திரெட்ஸ் என்பது பயனர்கள் எழுத்து மூலம் கருத்தைப் பகிரும் சமூக வலைதளம். அதில் ஒருவர் 500 எழுத்துக்கள் வரை ஒரு பதிவில் எழுதலாம்.
இது டுவிட்டருக்கு மிகப்பெரிய சவாலாக ஏன் அச்சுறுத்தலாகக் கூட இருக்கும் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதனை இன்ஸ்டாகிராம் கணக்கின் வாயிலாக ஒருவர் தொடங்கலாம்.
திரெட்ஸில் எழுத்துக்களே பிரதானம் என்றாலும் அதில் புகைப்படங்கள், ஷார்ட்ஸ், உயர் தர வீடியோக்களையும் பகிரலாம்.
இந்நிலையில், திரெட்ஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு முதல் ஏழு மணி நேரத்தில் பத்து மில்லியன் பயனர்களை பதிவுசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திரெட்ஸ் செயலியின் இலச்சினை (லோகோ) தமிழின் 'கு' எழுத்து போல் இருப்பதாகவும், மலையாளத்தில் 'Thra' (த்ரெ) என்ற ஒலி கொண்ட எழுத்தின் சாயலில் இருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM