(நெவில் அன்தனி)
இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 13ஆவது ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தகுதிகாண் சுற்றின் மூலம் இலங்கையுடன் இரண்டாவதாக இனையப்போகும் அணி எது என்பதைத் தீரமானிக்கும் ஸ்கொட்லாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான சுப்பர் 6 போட்டி புலாவாயோவில் வியாழக்கிழமை (06) நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு அணிகளில் எந்த அணி பலம்வாய்ந்தது அல்லது எந்த அணி வெற்றிபெற்று உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும் என்பதை அனுமானிப்பது இலகுவான காரியம் அல்ல.
ஏனெனில் இந்த இரண்டு அணிகளும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளை தகுதிகாண் சுற்றில் வெற்றிகொண்டுள்ளன.
தகுதிகாண் சுற்றில் அயர்லாந்தையும் சுப்பர் 6 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளையும் ஸிம்பாப்வேயையும் ஸ்கொட்லாந்து வெற்றிகொண்டு வரலாறு படைத்திருந்தது.
மறுபக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தகுதிகாண் சுற்றில் சுப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றிகொண்டிருந்தது.
இந்த இரண்டு அணிகளுக்கும் பெரிய அளவில் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாதபோதிலும் தகுதிகாண் சுற்றில் வெளிப்படுத்திய ஆற்றல்கள் பிரமிக்கவைத்துள்ளன.
சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்த இரண்டு அணிகளும் 11 போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் 7 - 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் ஸ்கொட்லாந்து முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் ஸ்கொட்லாந்துக்கு அனுகூலமான முடிவு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நெதர்லாந்தும் இந்தப் போட்டியை இலகுவில் நழுவவிடப்போவதில்லை.
இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்து வெற்றிபெற்றால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுவிடும்.
ஆனால், நெதர்லாந்து தகுதிபெறுவதாக இருந்தால் மிகப் பெரிய நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றிபெறவேண்டும்.
ஸ்கொட்லாந்தின் நிகர ஓட்ட வேகம் 0.296 ஆகவும் நெதர்லாந்தின் நிகர ஓட்ட வேகம் -0.042 ஆகவும் இருக்கின்றன.
எனவே, இரண்டு அணிகளும் என்ன விலைகொடுத்தேனும் வெற்றிபெற வெண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடவுள்ளதால் இன்றைய போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
உலகக் கிண்ணப் போட்டிக்கு வரவேற்பு நாடான ஸிம்பாப்வே தகுதிபெறும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடைசி 2 சுப்பர் 6 போட்டிகளில் இலங்கையிடமும் ஸ்கொட்லாந்திடமும் தோல்வி அடைந்ததால் அதன் உலகக் கிண்ண கனவு தவிடுபொடியாகிவிட்டது.
அணிகள்
ஸ்கொட்லாந்து: கிறிஸ்டோபர் மெக்ப்றைட், மெத்யூ க்ரொஸ், ப்றெண்டன் மெக்முலென், ஜோர்ஜ் மன்சே, ரிச்சி பெறிங்டன் (தலைவர்), தொமஸ் மெக்கின்டோஷ், மைக்கல் லீஸ்க், கிறிpஸ் க்றீவ்ஸ், மார்க் வொட், சபியான் ஷரிப், கிறிஸ் சோல்.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மெக்ஸ் ஓ'டவ்ட், வெஸ்லி பரெஸி, ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), பாஸ் டி லிட், சக்கிப் ஸுல்பிகார், லோகன் வென் பீக், டேஜா நிடாமனுரு, ரெயான் க்லெய்ன், ஆரியன் டட்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM