இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசி மீதான வரியை 15ரூபாவிலிருந்து 5 ரூபாவாகக் குறைத்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

தீர்வை வரி, தேச நிர்மாண வரி உள்ளிட்ட மேலும் பல வரிகள் காரணமாக இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் அரிசி மீதான வரி 80 ரூபா வரை அதிகரித்திருந்தது. இதனையடுத்து கடந்த 6 ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசி மீதான வரி 80 ரூபாவிலிருந்து 15 ரூபாவாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இறக்குமதி செய்யடும் அரிசி மீதான அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு, 5 ரூபா சந்தை வரியை மாத்திரம் அறவிடுவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரித் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.