ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் இந்துமா சபை வீதியில், மாணவி ஒருவர் முச்சக்கர வண்டியில் மோதுண்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹைலன்ஸ் கல்லூரியில் தரம் 4 இல்  கல்வி பயிலும் குறுpத்த மாணவி, வீதியை கடக்க முயன்றபோது இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்து சம்பவம், அருகில் இருந்த மண்டபம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமாராவில்  பதிவாகியுள்ளது.

மாணவி சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சாரதி பிணையில் விடுவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.