தமிழ்,மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள நடிகை நாய்கடிக்குள்ளாகி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்றுள்ளது. 

நடிகை பருல்யாதவ், தமிழில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் கஸ்தூரிராஜாவின் `டிரீம்ஸ்' படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாகவும், `புலன் விசாரணை-2' படத்திலும் கதாநாயகியாக நடித்தவராவார்.

பருல்யாதவுக்கு நாய்கள் மீது அதிக பிரியம் என்பதால், மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள தனது வீட்டில் சில நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு வளர்ப்பு நாயுடன் அவர் வசிக்கும் பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் சுற்றித்திரிந்த சில நாய்கள், நடிகை பருல்யாதவின் நாயை கடிக்கவே அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டநடிகையும் கடித்துள்ளன. 

ஒரே சமயத்தில் 6 நாய்களின் தாக்குதலுக்கு உள்ளான அவர் அருகிலிருந்தவர்களால் காப்பாற்றபட்டு, வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.