வவுனியாவில் விருந்தினர் விடுதி ஒன்றினை முற்றுகை இட்டு இளம் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில தெரியவருவதாவது,
வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20, 34 வயதுடைய இரு பெண்களும், போதைப்பொருள் பாவித்திருந்தமையுடன் விபச்சாரத்திற்கு உடந்தையாக செயற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில் இரு ஆண்கள் என நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கைகள் பெறப்படவுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
குறித்த விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் பின்னனியில் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் பின்னணியில் இயங்குகின்றமையும் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM