கடன் அடிப்படையில் வீடுகனை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
இந்தச் சந்தேக நபருக்கு எதிராக நுகேகொட பிரிவிலுள்ள மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 14 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் முறைப்பாட்டாளரிடமிருந்து 19,215,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் நுகேகொட பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை 071-8591641 அல்லது விசேட குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியை 011-2852556 அல்லது 071-8137373 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM