இந்தியாவில் பிரியாணி சாப்பிடுவோர் அதிகமுள்ள நகரம் எது என்ற பட்டியலில் ஹைதராபாத் முதலிடம் பிடித்துள்ளது என்ற ருசிகர தகவலை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகில் அதிக ரசிகர்களை கொண்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்த அளவுக்கு தேசம் கடந்து பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாக பிரியாணி திகழ்கிறது. அதிலும் பிரியாணி குறித்த பேச்சு எழுந்த உடனேஇ அதை உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை தோன்ற வைக்கும் உணவுகளில் அதுவும் ஒன்று என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு திருமணமோஇ பிறந்தநாளோ அல்லது வேறு ஏதேனும் கொண்டாட்டமோ எதுவாக இருந்தாலும் அசைவம் விரும்புவோரின் உடனடி தேர்வும் முதன்மை தேர்வும் பிரியாணி தான்.
ஒவ்வொரு மண் சார்ந்தும் ஊருக்கு ஊர் தனித்துவமான ருசியுடன் பிரியாணி தயார் செய்யப்படுகிறது. அந்தந்த ஊர்களுக்கு ஏற்ப சில மூலப்பொருள்களை சேர்ப்பதன் மூலம் சுவையிலும் மனத்திலும் வித்யாசத்தை காண்பிக்கின்றனர். அப்படி ஹைதராபாத் பிரியாணி மலபார் பிரியாணி ஆம்பூர் பிரியாணி திண்டுக்கல் பிரியாணி என வித விதமான பிரியாணிகள் மணக்க மணக்க பரிமாறப்படுகின்றன.
அதிலும் சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அனைத்து ஊர்களிலும் கிடைக்கக் கூடிய பிரியாணிகளின் வகைகளும் கிடைக்கும் வகையில் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதனால் நகரவாசிகள் வீட்டில் இருந்தவாறு தங்களுக்கு பிடித்த பிரியாணியை ஆர்டர் செய்து உண்ணும் வாய்ப்பை பெறுகின்றனர்.
இப்படி நாடு முழுக்க பிரியாணி ஆர்டர் செய்தோர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை டெலிவரி நிறுவனமான ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 760 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் ஸ்விகி மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 13140 பிரியாணி ஆர்டர்கள் தங்கள் செயலி மூலம் புக் செய்யப்படுவதாக ஸ்விகி நிறுவனம் கூறுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு கடந்த ஜூன் மாதம் இரண்டாம் வாரம் இறுதி வரையில் அதிகமான பிரியாணி ஆர்டர் செய்தோர் பட்டியலில் ஹைதராபாத் முதலிடம் பிடித்துள்ளது. 72 லட்சம் பேர் ஸ்விகி மூலம் பிரியாணி ஆர்டர் செய்ததால் பிரியாணி உண்போர் பட்டியலில் அந்நகரம் முதலிடம் பிடித்திருக்கிறது.
இதற்கு அடுத்தப்படியாக பெங்களூரு நகர வாசிகள் 50 லட்சம் பிரியாணிகளை ஆர்டர் செய்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். சென்னை வாசிகளை பொறுத்தவரை கடந்த ஜூன் இரண்டாம் வார இறுதி வரை 30 லட்சம் பிரியாணிகளை ஆர்டர் செய்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM