நுவரெலியாவில் வீதியில் மரமும் மின் கம்பமும் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Published By: Digital Desk 3

05 Jul, 2023 | 04:32 PM
image

நுவரெலியா  நகரில் உள்ள நுவரெலியா மற்றும் கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை காரணமாக வீசும் கடும் காற்றால் மரமொன்று மின் கம்பமொன்றின் மேல் முறிந்து விழுந்தில் அவ்வீதியினூடான போக்குவரத்து இன்று புதன்கிழமை காலை முதல் தடைப்பட்டுள்ளதுடன் அனைத்து வாகனங்களும் மாற்றுவழியூடாக பயணிக்கின்றன.

இன்றைய தினம் அதிகாலை 1 மணியளவில் குறித்த மரமும், மின் கம்பமும் முறிந்து விழுந்துள்ள தாகவும், இதன்போது எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் நுவரெலியா பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

நுவரெலியா பிரதான நகருக்கு மின் இணைப்பை வழங்கும் கம்பம் முறிந்து  விழுந்துள்ளமையால் பிரதான நகருக்கான மின்சாரம் இன்று காலை முதல் துண்டிக்கப் பட்டுள்ளது. அத்துடன் மின் கம்பிகள் எல்லாம் அறுந்து வீதியில் விழுந்துள்ளன. ஏனைய சில மின்கம்பங்களும் சேதம் ஏற்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பில் இப்பகுதிக்கு பொறுப்பான மின்சார சபைக்கு உடனே அறிவித்து  பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு முறிந்த மின்கம்பத்தை மாற்றி  ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:29:10
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13
news-image

02 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன்...

2025-03-18 14:51:37
news-image

மியன்மார் சைபர் கிரைம் மோசடி முகாம்களில்...

2025-03-18 13:11:10