பம்பலப்பிட்டியில் காரில் தனது காதலியுடன் சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி பணம் மற்றும் 160,000 ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படும் நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனது காதலியுடன் இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தங்க நகை மற்றும் 3,000 ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக திங்கட்கிழமை (03) மாலை பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் முதலில் பணம் கேட்டதாகவும், பணம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினரின் மகன் கூறியதையடுத்து, சந்தேக நபர் தனது இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து எம்பியின் மகனின் கழுத்தில் வைத்து மிரட்டியே பணத்தையும் தங்க நகையையும் கொள்ளையிட்டுள்ளார்
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM