விமானநிலையத்தில்பயணியின் கையடக்க தொலைபேசியை சோதனை செய்ததால் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளது- அவுஸ்திரேலிய அதிகாரிகள்

Published By: Rajeeban

05 Jul, 2023 | 01:01 PM
image

சிட்னி விமானநிலையத்தில் பயணியொருவரின் உடமைகளை சோதனையிட்டதன் காரணமாக 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளதாக  அவுஸ்திரேலிய காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அளவி;ல் மேற்கொள்ளப்பட்ட பாரிய சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பிலிப்பைன்சில் 16 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்சின் வடக்குபகுதி நகரமொன்றில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்சிலிருந்து நாடுதிரும்பிய குயின்லாந்தை சேர்ந்த நபரின் பயணப்பொதியை சிட்னி விமானநிலையத்தில் ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டவேளையே இந்த நடவடிக்கை ஆரம்பமானது.

விமானநிலையத்தில்  எல்லை பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட நபர் ஒருவரின் கையடக்கதொலைபேசியை சோதனையிட்டவேளை அதில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான  படங்கள் வீடியோக்களையும் அவரது நோக்கத்தை வெளிப்படுத்தும் தகவல்களையும் ஆராய்ந்துள்ளனர்.

இந்த தகவலை அவர்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளிற்கு தெரியப்படுத்த அவர்கள் பிலிப்பைன்ஸ் பொலிஸாருக்கு அதனை தெரியப்படுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலிய பொலிஸார் 55 வயது நபரை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர் 

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஐ.அ. இராச்­சி­யத்தில்...

2024-07-13 17:16:55
news-image

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில்...

2024-07-13 16:55:46
news-image

இந்தியாவில்13 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு...

2024-07-13 12:39:59
news-image

பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் 'பிம்ஸ்டெக்'கின்...

2024-07-13 10:54:13
news-image

மொஸ்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் 3...

2024-07-13 10:12:04
news-image

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்...

2024-07-12 15:06:27
news-image

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான...

2024-07-12 12:28:03
news-image

ரஷ்யாவுக்கு உளவு தகவல் வழங்கிய அவுஸ்திரேலிய...

2024-07-12 12:10:55
news-image

உக்ரைன் ஜனாதிபதியை புட்டின் என அழைத்த...

2024-07-12 11:33:04
news-image

நேபாளத்தில் நிலச்சரிவு ; 60 பயணிகளுடன்...

2024-07-12 11:08:53
news-image

இலங்கையிலிருந்து தமிழக மீனவர்களை, படகுகளை மீட்க...

2024-07-12 10:40:09
news-image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள்...

2024-07-11 18:06:40