தெற்காசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (SAFF) 2023 சம்பியன்ஷிப் சுற்றுப்போட்டியில் இந்தியா சம்பியனாகியுள்ளது.
இந்தியாவின் பெங்களூரு நகரில் நேற்றிரவு (4) நடைபெற்ற இறுதிப் போட்டியில் குவைத் அணியை பெனல்டி முறையில் 5-4 கோல்கள் விகிதத்தில் இந்திய அணி வென்றது.
14 ஆவது தடவையாக நடைபெற்ற இப்போட்டிகளில், வரவேற்பு நாடான இந்தியா 9 ஆவது தடவையாக சம்பியனாகியுள்ளது.
இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்துக்கு பீபாவினால் விதிக்கப்பட்ட தடை காரணமாக இச்சுற்றுப்போட்டியில் இலங்கை பங்குபற்றவில்லை.
குவைத், மற்றும் லெபனான் அணிகள் விசேட அழைப்பின் பேரில் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றின.
அரை இறுதிப்போட்டியில் பங்களாதேஷை 1- 0 விகிதத்தில் வெற்றிகொண்டு குவைத் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தது.
மற்றொரு அரைஇறுதியில் லெபனானை பெனல்டி முறையில் 4:2 விகிதத்தில் வென்று இந்தியா இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது.
பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் குவைத் வீரர் சபைப் அல்கால்தி 15 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தி அவ்வணியை முன்னிலையில் இட்டார்.
எனினும், 39 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் லாலியன்ஸுவாலா சாங்டே கோல் புகுத்தி, கோல் நிலையை சமப்படுத்தினார்.
சம்பியனான இந்திய அணியினர்
அதன்பின் வேறு கோல்கள் புகுத்தப்படாததால் நிர்ணயிக்கப்பட்ட நேர ஆட்டம் 1-1 விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்தது. மேலதிக நேர ஆட்டத்திலும் கோல் எதுவும் புகுத்தப்படவில்லை.
இதனால், இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதன்போது இரு அணிகளும் தலா 4 கோல்களைப் புகுத்தியதால் மீண்டும் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இந்தியாவின் சார்பில் அணித்தலைவர் சுனில் ஷேத்ரி, சந்தேஷ் ஜின்கான், சாங்டே, சுபாஷிஸ் போஸ் ஆகியோர் கோல் புகுத்தினர். உடான்டா சிங் கோல் புகுத்தத் தவறினார்.
குவைத் சார்பில் பவாஸ் அல் ஒதைபி, அஹ்மட் அல் தெபெரி, அப்துல் அஸீஸ் நாஜி, சபைப் அல்கால்தி ஆகியோர் கோல் புகுத்தினர். அப்துல்லா தஹம் கோல் புகுத்தத் தவறினார்.
2 ஆம் இடம் பெற்ற குவைத் அணியினர்
தலா 5 பெனல்;டிகளின் முடிவில் இரு அணிகளும் 4 கோல்களைப் புகுத்தியிருந்ததால், வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக 'திடீரென முடிக்கும் விதி' (சடன் டெத் ரூல்) அமுல்படுத்தப்பட்டது.
அதன்படி, இரு அணிகளுக்கும் தலா ஒரு பெனல்டி வாய்ப்பு வழங்கப்பட்டபோது, இந்திய அணி சார்பில் மகேஷ் சிங் கோல் புகுத்தினார். ஆனால், குவைத் அணித் தலைவர் காலித் இப்ராஹிம் ஹாஜியா அடித்த பந்தை இந்திய கோல் காப்பாளர் குர்பிரீத் சிங் சாந்து தடுத்து நிறுத்தினார். இதனால், இந்தியா பெனல்டி முறையில் 5:4 கோல்கள் விகிதத்தில் வெற்றியீட்டியது.
இச்சுற்றுப்போட்டியில் அதிக கோல் (5) புகுத்திய வீரர் விருதையும் மிகப் பெறுமதியான வீரர் விருதையும் இந்திய அணித்தலைவர் சுனில் ஷேத்ரி வென்றார். சுpறந்த கோல் காப்பாளராக பங்களாதேஷின் அனிஸுர் ரஹ்மான் ஸிகோ தெரிவானார். (சேது)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM