அக்கரப்பத்தனை பொலிஸின் முறைப்பாட்டு குறிப்பேடுகள் எரித்து அழிப்பு : பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தம்! 

05 Jul, 2023 | 12:35 PM
image

அக்கரப்பத்தனை பொலிஸாரால் பதியப்பட்ட பல்வேறு முறைப்பாட்டு குறிப்பேடுகளின் பக்கங்களை எரித்து அழிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக  அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த புத்தகத்தை அழிக்குமாறு சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட், குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வழங்கிய அறிவுறுத்தலின்  பிரகாரம், அந்தக் குறிப்பேட்டை பெண்கள் விடுதிக்கு அவர் எடுத்துச் சென்று பக்கங்களை அகற்றி எரித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.  

எந்தவொரு உயர் அதிகாரியிடமும் அனுமதி பெறாமல் பல்வேறு முறைப்பாட்டுக் குறிப்பேடுகளை அழித்த குற்றத்துக்காக இந்த சார்ஜன்ட் நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01
news-image

யாழில் கைப்பற்றப்பட்ட 44 கேரள கஞ்சாப்...

2024-12-08 17:20:37
news-image

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய...

2024-12-08 16:45:05
news-image

கொழும்பில் செரிட்டி கடைத் தொகுதி -...

2024-12-08 16:39:09
news-image

மின்கட்டணத்தை 2/3 மடங்கால் குறைப்பதாகக் கூறிய...

2024-12-08 15:33:06
news-image

வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் கவனம்...

2024-12-08 15:39:23
news-image

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சி...

2024-12-08 15:34:58
news-image

மின்கட்டணத்தை ஆறு மாதங்களுக்கு பேணுவதற்கு பரிந்துரை

2024-12-08 15:28:40
news-image

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள்...

2024-12-08 15:29:37
news-image

ஜா - எல பகுதியில் ஹெரோயினுடன்...

2024-12-08 15:31:51
news-image

வரக்காபொல பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர்...

2024-12-08 15:26:54