2026 இன் பின் ஊழியர் சேமலாப நிதியத்தின் 9 வீதவட்டி குறைவடையாதென உறுதியளிக்க முடியுமா ? அரசாங்கத்திடம் ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

05 Jul, 2023 | 10:02 AM
image

(எம்.மனோசித்ரா)

ஊழியர் சேமலாப நிதியத்தினூடாக வழங்கப்படும் 9 சதவீத வட்டி 2026 ஆம் ஆண்டின் பின்னர் குறைக்கப்பட மாட்டாது என அரசாங்கத்தால் உறுதியளிக்க முடியுமா? அரசாங்கம் அதன் கடன் சுமையை குறைப்பதற்காக மக்களின் பணத்தை சூரையாடியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சுமத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கம் அதன் கடன் சுமையை குறைப்பதற்காக மக்களின் சேமிப்பை சூரையாடியுள்ளது. வங்கி கட்டமைப்புக்களுக்கும் , ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறி மக்களை ஏமாற்றி 12 டிரில்லியன் ரூபாவை அரசாங்கம் சூரையாடியுள்ளது.

2026 இன் பின்னர் ஊழியர் சேமலாப நிதியத்தினூடாக வழங்கப்படும் வட்டி வீதத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கத்தால் உறுதியளிக்க முடியுமா?

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு கோரவில்லை.

தற்போதுள்ள நிலைமையில் நாட்டை தொடர்ந்தும் நிர்வகித்துச் செல்ல முடியாது என்பதற்காகவே இவ்வாறானதொரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி , நிதி அமைச்சு மற்றும் அரசாங்கம் இதனை நன்கு அறிந்திருந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தற்போதுள்ள அமைச்சரவையே பொறுப்பு கூற வேண்டும்.

இவர்களுடன் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றால் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

தேசிய கடன் மறுசீரமைப்பின் ஊடாக அரசாங்கம் தற்காலிக தீர்வையே முன்வைத்துள்ளது. விரைவில் மீண்டும் சிலருக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவா ஜனாதிபதி எமக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். 

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உத்தரவாதமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியிடமிருந்து எந்த உத்தரவாதத்தையும் நாம் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் எதிர்க்கட்சி தலைவர் பதவி அவர் வழங்கியதல்ல.

ஊழல் , மோசடிகளை ஒழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நாம் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால் நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒருபோதுத் துணைபோக மாட்டோம்.

இந்த அரசாங்கம் மக்கள் ஆணையற்றது. எனவே மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க அவர்களுக்கு அரசாங்கம் வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி...

2024-06-13 22:29:31
news-image

ரணிலின் வேலைத்திட்டமே சர்வதேச நாணய நிதியத்தின்...

2024-06-13 16:48:39
news-image

பயங்கரவாதிகள் போல் செயற்படுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க...

2024-06-13 16:54:47
news-image

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்புக்கு...

2024-06-13 20:54:34
news-image

நாளை 2 மணிக்குள் சாதகமான பதிலின்றேல்...

2024-06-13 17:35:08
news-image

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல்...

2024-06-13 20:19:38
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய...

2024-06-13 19:53:18
news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18
news-image

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு...

2024-06-13 17:27:50