ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை குற்றப்புலனாய்வுக்கு அழைத்தமை ஊடகங்களை அடக்கும் மற்றுமொரு நடவடிக்கையாகும் - ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம் அறிக்கை

Published By: Digital Desk 3

05 Jul, 2023 | 09:07 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டிருப்பது ஊடகங்களை அடக்கும் மற்றுமொரு நடடிக்கையாகும் என ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர செவ்வாய்க்கிழமை (04)  கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக  ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டிருப்பது ஊடகங்களை அடக்கும் மற்றுமொரு நடவடிக்கையாகும். சில மாதங்களுக்கு முன்னரும் இவர் இவ்வாறு குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருப்பது மூன்றாவது தடவையாகும்.

அரசாங்கத்தினால் ஊடக ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலம், சமூகவலைத்தள ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் போன்ற பல அடக்குமுறை சட்டமூலங்களை பிரேரித்துள்ள சந்தர்ப்பத்திலே இவ்வாறு ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதனால் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டதானது கருத்து தெரிவிக்கும் அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகவே காண்கிறோம்.

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கடந்த மே மாதம் 29ஆம் திகதி மருதானை சமூக கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது தெரிவித்திருந்த விடயங்கள் தொடர்பாக வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளவே இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார். அதன் பிரகாரம் நேற்றைய தினம் காலை 10,30 மணிக்கு அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13