(ப.பன்னீர்செல்வம், எம்.எம்.மின்ஹாஜ்)

ஜோசப்பரராஜசிங்கம், நடராஜாரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோரை படுகொலை செய்தது யார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

நாட்டில் தற்போது தவறு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமறியல் இருப்பதனையிட்டு சந்தோஷப்பட வேண்டும். முன்பு விளக்கமறியலில் வைக்கவில்லை. காணாமல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சட்ட பிரச்சினையொன்றை எழுப்பி நிதிபுலனாய்வு பிரிவு தொடர்பில் கேள்வி எழுப்பும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.