ஜூலை மாத ராசி பலன்கள் 2023

Published By: Ponmalar

04 Jul, 2023 | 03:14 PM
image

மேஷம்

வெற்றி பாதையை தேடிச் சென்று செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு, ராசியில் ஜென்ம குருவுடன் ராகு இணைவும், ராசிநாதன் சுகஸ்தானத்தில் தனாதிபதியுடன் இணைவு பெறுவதும், லாபாதிபதி சனி வக்கிரகதியில் ராசியை பார்வை இடுவதும் தொழிலிலும், உத்தியோகத்திலும் உங்களின் மேன்மையை ஏற்படுத்தி வளம் பெறுவீர்கள். சகோதர்களின் மூலம் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். நல்ல குடும்ப சூழ்நிலை உருவாகி மனமகிழ்ச்சியும், எதிர்பார்த்த வருமானமும் வர துவங்கும். தொழிலாளர்கள் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். பாதுகாப்பு துறையினருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். தேவைகள் நிறைவு தரும்.

சந்திராஷ்டம நாட்கள்: 27.07.2523 வியாழன் காலை 07.53 முதல் 29.07.2023  சனி இரவு 08.51 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: செம்மஞ்சள், சிவப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை காலை 06 - 07 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து, தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள, சகல காரியமும் சித்தியாகும்.

ரிஷபம்

காலத்திற்கு தகுந்த செயல்பாடுகளை செய்யும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனாதிபதி புதன் ஆட்சி பெற்றும், ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்தும், தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று அமைவதும். உங்களின் அனைத்து காரியங்களிலும் வெற்றியையும், மனவலிமையும் உண்டாக்கும். நினைத்ததை சாதிக்க உங்களுக்கு பக்க பலமாக ஆதரவு கிடைக்கும். விரும்பிய வாழ்க்கையை அடைய சிலருக்கு வாய்ப்புகள் அமையும். அதிக செலவுகள் உண்டாகும். செலவுகளைக் குறைத்துக் கொள்ள நினைத்தாலும் அதில் சில தடைகள் உண்டாகும். குறைந்த முதலீடு செய்து வருபவர்களுக்கு லாபம் கிடைக்கும். சில தொழிலில் வரவும் செலவும் சரியாக இருக்கும். புதிய தொழில் முயற்சியை சில காலம் நிறுத்தி வைத்து கொள்வது நல்லது. கலை துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் சிறு தடை உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்: 29.07.2023 சனி இரவு 08.52 முதல் 31.07.2023 திங்கள் இரவு 12.12 மணி வரை.

02.07.2023 ஞாயிறு பகல் 12.43 முதல் 04.07.2023 செவ்வாய் மாலை 03.55 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் வைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டி வர தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.

மிதுனம்

திடமான நம்பிக்கையும், திறமையும் கொண்ட மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசியில் ராசிநாதனுடன் சூரியன் அமர்வதும் லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதும் உங்களின் நிறைவேற தடைபட்ட காரியங்கள் விரைவாக நடக்க ஆரம்பிக்கும், குடும்பத்தில் எதிர்பார்த்த சுபகாரியம் நடக்கும். சிலருக்கு திருமண வாய்ப்புக்கள் அமையும். கலைத்துறையில் சாதிக்க நினைக்கும் சிலருக்கு வெற்றியைப் பெறும் வாய்ப்புகள் அமையும். அரசியலில் சிறந்த ஆலோசகராக இருந்து செயல்படுவீர்கள். முக்கிய செயல்பாடுகளில் உங்களின் பங்குகள் சிறப்பாக அமையும். வரவேண்டிய தொகைகள் வர வழி கிடைக்கும். கல்வியில் அறிவியல் பூர்வமான செயல்பாடுகளால் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பொருளாதார நிலை மேம்படும்.

சந்திராஷ்டம நாட்கள்: 04.07.2023 செவ்வாய் மதியம் 03.56 முதல் 06.07.2023 வியாழன் மாலை 06.21 மணி வரையும்.

31.07.2023 திங்கள் இரவு 12.13 முதல் 02.08.2023 புதன் இரவு 02.38 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிற்றுகிழமைகளில் பகல் 12.00 - 01.00 மணிக்கு நவகிரக கேதுவுக்கு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு, பச்சை பயிறு வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் நன்மை தரும்.

கடகம்

விரைவாக எதையும் செய்து முடிக்க நினைக்கும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு தனஸ்தானத்தை பார்ப்பதும், ராசிநாதன் லாபஸ்தானத்தை பார்ப்பதும், நீங்கள் செயல்படும் காரியங்களின் நற்பலன்களை பெற செய்யும். அட்டம சனி நடக்கும் காலம் பிணையம் இடுவதும், உறுதி மொழி கொடுப்பதும் தவிர்ப்பது நல்லது. விரையாதிபதி ஆட்சி பெற்றிருப்பதால், தேவையற்ற செலவுகள் வரும் என்பதால் அத்தியாவசியமான செலவுகளை மட்டும் செய்து, மற்றதை தவிர்ப்பது நல்லது. திடீரென்று சில நேரம் அதிர்ஷ்ட பலன்கள் வந்து சேரும். அரசியலிலும், பொது வாழ்விலும் நல்ல அனுபவ பாடங்களை தெரிந்து கொள்வீர்கள். தொழிலில் கவனமுடன் செயல்படுவதும் நல்லது. பணம் புரளும்.

சந்திராஷ்டம நாட்கள்: 06.07.2023 வியாழன் மாலை 06.22 முதல் 08.07.2023 சனி இரவு 06.53 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், செம்மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு, சனிகிழமைகளில் நவகிரக வழிபாட்டை ராகு காலத்தில் செய்து, நவதானியம் வைத்து, அதில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர, சகல காரியமும் நன்மை பெறும்.

சிம்மம்

வாழ்க்கையின் மேன்மைக்காக தேவையானவற்றை செய்யும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனுடன் புதன் லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமைவது . உங்களின் எதிர்கால திட்டங்களை மேன்மைப்படுத்திக் கொள்வீர்கள். தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். எதிர்ப்புகளிலிருந்து விடுபட்டு, நற்பலன் அடைவீர்கள். சுமையாக இருந்த காரியங்கள் எளிதாக முடியும். சாதிக்க வேண்டிய செயல்களில் சிரமமின்றி வெற்றி காண்பீர்கள். காரியத்தில் வெற்றியை அடைவதுடன் பொருளாதார வளமும் பெறுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு ஏற்றம் பெறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் எதையும் உடனே செய்வீர்கள். புதிய திட்டம் செயல்பட தாமதம் ஆனாலும் நடக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 08.07.2023 சனி இரவு 08.54 முதல் 10.07.2023 திங்கள் இரவு 12.23 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள். செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்கிழமை முருகன் வழிபாடும், சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடும் தொடர்ந்து செ்யது வர, உங்களின் சகல காரியமும் வெற்றியும், அனுகூலமும் உண்டாகும்.

கன்னி

தனித்திறமையுடன் எதையும் சாதிக்கும் திறன் கொண்ட கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் தனாதிபதியுடன் செவ்வாய் இணைவு பெறுவதும். உங்களின் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமைவதும், லட்சியத்தை அடையும் இலக்கை வெல்வீர்கள். நல்ல முயற்சிகளுக்கு உங்களுக்கு பக்க பலமாக உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புத்தம் புதிய தொழில் துவங்குவது சம்மந்தமான சூழ்நிலைகள் உருவாகும். ஏற்கனவே இருக்கும் கண் பிரச்சினை தீர, வழி கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலை தேடுபவருக்கு வேலை கிடைக்கும். கலைத்துறையினர் எளிதில் வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சிறு தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 10.07.2023 திங்கள் இரவு 12.24 முதல் 13.07.2023 வியாழன் அதிகாலை 05.41 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெண்மை, செம்மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வர சகல காரியமும் நன்மையைத் தரும்.

துலாம்

வைராக்கியமும், மனவலிமையும் கொண்ட துலாம் ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வையும் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் தனாதிபதியுடன் இணைவு பெறுவதும், திறமையும், கொள்கை பிடிப்பும் கொண்டு விளங்குவீர்கள். எந்த காரியமாகவும், செயல்படுத்தும் போது நிதானமும் பின்பு உத்வேகமும் கொண்டு செயல்படுவீர்கள். பொது விடயங்களில் உங்களின் எண்ணங்களில் வரும் பிரதிபலிப்பு நெருக்கமான நட்புகளை உருவாக்கும். கலைமீது ஆர்வமுள்ளவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். சுயதொழிலில் சிலருக்கு முன்னேற்றமும், வருமானமும் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இதுவரை சட்ட ரீதியான வழக்குகள் இருந்தால், அது முடிவுக்கு வரும். அதிக கவனமுடன் செயல்பட்டு, செயல்களில் உறுதியுடன் செயல்படுவீர்கள். உடல்நலன் மேம்படும்.

சந்திராஷ்டம நாட்கள்: 13.07.2023 வியாழன் அதிகாலை 05.42 முதல் 15.07.2023 சனி பகல் 01.28 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், பலவர்ணம்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு கிழமைகளில் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர உங்களின் தடைபட்ட காரியங்கள் விரைவில் நடக்கும்.

விருச்சிகம்

திறமையும், வெளிபடைத் தன்மையும் கொண்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில்  ராசிநாதன் அமர்ந்து மூன்றாமிடத்தை பார்ப்பது உங்களின் முயற்சிகளுக்கு பக்க பலமாக அமையும். உங்களின் தொழிலில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். கவலைகளை மறந்து உங்களின் செயலில் கவனம் செலுத்தி வளம் பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை உங்களுக்கு நன்மையை தரும். தீயவர்களின் சக வாசம் தவிர்ப்பது நன்மை உண்டாகும். தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள். நேர்மையும், உண்மையும் உங்களை எப்பொழுதும் காக்கும். கலை துறையினரும், விளையாட்டு துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டு நன்மை பெறுவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும். வாகன ஒட்டிகள் சாலையில் சற்று கவனமுடன் செல்வது நல்லது. பணம் புரளும்.

சந்திராஷ்டம நாட்கள்: 15.07.2023 சனி பகல் 01.29 முதல் 17.07.2023 திங்கள் இரவு 12.33 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: செம்மஞ்சள், சிவப்பு, வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு வடை மாலை சாத்தி மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி வர காரியதடை நீங்கி, உடல் நலன் பெறுவீர்கள். பொருளாதாரம் வளம் பெறும்.

தனுசு

காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், சனி பலம் பெற்று அமைவதும். உங்களின் வாழ்க்கையின் சூழ்நிலைகள் மாற்றி அமையும். தெரிந்தவர்கள் மூலம் இருந்தாலும் தெரியாதவர்கள் மூலம் நிறைய நற்பலன்களை அடைவீர்கள். சின்ன சின்ன சில காரியங்களை செயல்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுவீர்கள். புதிய திட்டங்களுக்கு உதவிகளும் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். வாகன ஓட்டிகள் சுற்றுலா, கூலி மூலம் வருமானம் பெருகும். முக்கிய பிரமுகர் சந்திப்புகளால் நன்மை அடைவீர்கள். கலைதுறையினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். குறைந்த முதலீடு செய்த தொழிலில் நல்ல வளம் பெறுவீர்கள். பண பழக்கம் இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 17.07.2023 திங்கள் இரவு 12.34 முதல் 20.07.2023 வியாழன் பகல் 11.28 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு, பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு, புதன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடுகளின் மூலம் உங்களின் சகல காரியமும் அனுகூலமாக அமையும்.

மகரம்

வலிமையும், லட்சியத்தின் உறுதியும் கொண்ட மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்தும் உங்களின் யோகாதிபதி சுக்கிரனின் பார்வை பெறுவதால் உங்களின் இலக்குகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். பொதுவான விடயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சிறு காரியமாக இருந்தாலும் அதன் மீது முழு கவனம் செலுத்தி வருவீர்கள். உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலும், பிறருக்கு பிரச்சினை என்றாலும், அதனை எளிதாக எதிர்கொண்டு வெற்றியை காண்பீர்கள். அரசியலில் புதிய திருப்பத்தை காண்பீர்கள். கலைதுறையினருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களில். உங்களின் பங்கு வெற்றியை தரும். பெண்களுக்கு சிறப்பான காலமாக அமையும். கல்வியில் மாணவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 20.07.2023 வியாழன் பகல் 11.08 முதல் 22.07.2023 சனி இரவு 10.34 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, செம்மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரையும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும் தொடர்ந்து செய்து வர சகல காரியமும் சிக்கீரம் கைகூடும்.

கும்பம்

புத்துணர்ச்சியும், புதுபொலிவுடன் செயல்படும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்வதும் தனாதிபதி முயற்சி ஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் முழு முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. குறுகிய கால வியாபாரத்தில் ஓரளவு நல்ல லாபம் கிட்டும். அரசியலிலும், பொது வாழ்விலும் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவர். எதிலும் தைரியத்துடன் செயல்படும் நிலையும் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளும், சாதிக்கும் நிலையும் கிடைக்கும். காலத்தை வீண் செய்யாமல் அதில் முழுமையான ஈடுபாடுகள் மூலம் நன்மை பெறுவீர்கள். தொழிலாளர்களின் நலனின் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். பொருளாதாரம் தேவைகளுக்கு பயன் தரும்.

சந்திராஷ்டம நாட்கள்: 22.07.2023 சனி இரவு 10.35 முதல் 25.07.2023 செவ்வாய் காலை 08.25 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடகிழக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, புதன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர நினைத்த காரியம் தடையின்றி கைகூடும்.

மீனம்

பெரியோர்களிடத்தில் மதிப்பும், மரியாதையும் கொண்ட மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் தடைபட்ட காரியம் சீராக இயங்கும். எதிர்ப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். காலத்தை கருதி, எதையும் தள்ளி போடாமல் உடனே செயல்படுத்துவீர்கள். ஆன்மீகத்தில் அதிகமான ஆர்வம் கொண்டு விளங்குவீர்கள். முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும் வாய்ப்பு அமையும். எதையும் தெள்ள தெளிவாக விளக்கி சொல்லும் திறமை உண்டாகும். கலையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களின் எதிர்பார்ப்பை விட உங்களின் முன்னேற்றம் சிறப்பாக அமையும் உருவாக்கத்தைவிட உறுதியாக நின்று சிறப்பாக செயல்படுவீர்கள். நிச்சயமான வளர்ச்சியை பெறும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்வீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 25.07.2023 செவ்வாய் இரவு 08.26 முதல் 27.07.2023 வியாழன் மாலை 03.47 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு, செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு எள் கலந்த அன்னம் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியமும் கைகூடும். பணவரவு வரும்.

கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவகிரக தோஷங்களை நீக்கும் குளியல் பரிகாரம்..!

2024-06-20 19:53:01
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் நாமாவளி பரிகாரம்..!

2024-06-19 20:20:49
news-image

வெற்றிகளை அள்ளி வழங்கும் அரச மர...

2024-06-18 17:35:24
news-image

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த பொங்கலுக்கான...

2024-06-18 16:31:12
news-image

வெற்றியை அள்ளித்தரும் பாராயண பரிகாரம்...!

2024-06-17 20:42:41
news-image

அரசாங்க வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான எளிய...

2024-06-15 14:04:38
news-image

பண வசியத்திற்கும், மன அமைதிக்கும் இரண்டு...

2024-06-14 16:35:06
news-image

கடன் பிரச்சனை தீர்வதற்கான எளியதான பரிகாரங்கள்..!

2024-06-13 15:52:06
news-image

நினைத்ததை நடத்தி வைக்கும் ஏலக்காய் தீப...

2024-06-12 15:14:53
news-image

நோயை குணப்படுத்தும் எளிய பரிகாரம்...!?

2024-06-11 19:02:13
news-image

சர்வ அருளை வழங்கும் சரள யோகம்

2024-06-10 21:27:26
news-image

புண்ணியத்தை அருளும் ஸ்ரீ நாக யோகம்!

2024-06-08 16:47:15