நுவரெலியா - டயகமவில் புதிய மதுபான சாலையை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கங்கள் - மாவட்ட செயலாளருக்கு இராதாகிருஸ்ணன் கடிதம்

Published By: Digital Desk 3

04 Jul, 2023 | 02:35 PM
image

மலையக பகுதிகளில் புதிய மதுபான சாலைகளை திறந்து தொடர்ந்தும் இந்த மக்களை மயக்கத்தில் வைத்திருப்பதே அரசாங்கத்தினதும் அவர்களுக்கு துணைபோகின்ற அரசியல்வாதிகளதும் திட்டமாக இருக்கின்றது. இந்த மக்களை பொருளாதார ரீதியாக வலுவிலக்கச் செய்வதன் மூலமாக அவர்களின் எதிர்கால சந்ததியை தொடர்ந்தும் அடிமைத்தனமாக வைத்திருக்கவே இந்த அரசும் அவர்களுக்கு துணைபோகின்றவர்களினதும் திட்டமாக இருக்கின்றது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட டயகம பகுதியில் அமைக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைக்கு நாம் முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். இதனை தடுத்த நிறுத்த மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.

இன்று நாட்டில் இருக்கின்ற பொருளாதார பின்னடைவு காரணமாக பாரிய பாதிப்பை சந்திக்கின்றவர்கள் மலையக மக்களே. இவ்வாறான ஒரு நிலையில் புதிய மதுபான சாலைகளை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பதானது இந்த மக்களை அழிப்பதற்கான ஒரு திட்டமாகவே அதனை பார்க்கவேண்டியுள்ளது.

டயகம நகரில் ஏற்கனவே இரண்டு மதுபானசாலைகள் இருக்கின்றன. அங்கு ஒரு அரச கூட்டத்தாபன மருந்தாக்கல் கிளையை ஆரம்பிக்குமறு நாம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தோம். அதனை கண்டு கொள்ளாத அரசாங்கம் இன்று புதிய மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனை பார்த்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றவர்கள் தங்களுடைய இலாபத்தை நோக்கமாக கொண்டு செயற்படுகின்றனர். இதனை இந்த மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவட்டத்தில் எங்குமே அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஒரு கிளை கிடையாது. குறைவான விலையில் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான வழியில்லை. ஆனால் அரசாங்கம் புதிய மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கின்றது.

எதனை செய்ய வேண்டுமோ அதனை விட்டுவிட்ட எதனை செய்யக்கூடாதோ அதனை மும்முரமாக செய்து கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் விலைவாசி அதிகரிப்பால் அன்றாடம் குடும்பங்களில் உணவிற்கே இந்த மக்கள் கஷ்டப்படுகின்றார்கள். அவர்களுக்கு மேலும் மதுபானத்தை கொடுக்க அரசும் அரசுடன் இணைந்திருக்கின்றவர்களும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

மலையகத்தின் சாபக்கேடே இந்த மதுபானசாலைகள்தான். அதற்கு காரணம் மலையக அரசியல்வாதிகளே. என்னுடைய 30 வருடத்திற்கு மேற்பட்ட அரசியல் வாழ்வில் இதுவரையில் மதுபானசாலைகளுக்கான உரிமத்தையோ அதனை ஊக்குவிப்பதற்கோ கடுகளவேனும் நான் செயற்பட்டதில்லை.

எனவே, மலையகத்திற்கு இப்பொழுது தேவை மதுபானசாலகள் அல்ல. அவர்களின் வாழ்வாதார்த்திற்கான புதிய திட்டங்கள். ஏன் மலையகத்தில் மாத்திரம் புதிய மதுபானசாலைகளை திறப்பதற்கு அனைவரும் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் என்ற கேள்வி எமக்கு எழுகின்றது. திட்டமிட்ட அடிப்படையில் எங்களை சீரழிக்கின்றார்கள் என்பது மாத்திரம் உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்பள நிர்ணய சபை தொழிலாளர் பிரதிநிதிகளுடன் ...

2024-02-28 18:10:39
news-image

சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் மனிதநேய கூட்டணியை...

2024-02-28 18:03:47
news-image

சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள்...

2024-02-28 17:33:06
news-image

பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால்...

2024-02-28 17:42:48
news-image

குடிநீர் கிடைப்பதில்லை ; லிந்துலையில் மக்கள்...

2024-02-28 17:11:43
news-image

1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பை...

2024-02-28 17:09:46
news-image

சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார்...

2024-02-28 17:10:31
news-image

இராணுவத்தால் கையளிக்கப்பட்ட நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட...

2024-02-28 17:08:30
news-image

இலங்கையில் நீண்டகாலம் மோதலில் ஈடுபட்ட இரண்டு...

2024-02-28 17:05:54
news-image

முசோரியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் இலங்கையின்...

2024-02-28 17:07:39
news-image

துணிகளை உலர வைக்க வீட்டின் கொங்கிரீட்...

2024-02-28 17:11:49
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ஸ்ரீலங்கா...

2024-02-28 16:18:13