மலேஷியாவில் ஆறு ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
தெரெரங்கானு மாநிலத்தின் சுகாய் மாவட்டத்தில் காட்டுப்பகுதியிலுள்ள ஜேராம் மாவார் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் அதிகார ஹன்யன் ரம்லான் இது தொடர்பாக கூறுகையில், இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது, திடீரென ஆற்றுநீர் அளவு அதிகரித்ததால், இவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என நான் எண்ணுகிறேன். நீர்மட்டம் 3 மீற்றர் அளவுக்கு வேகமாக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் 4 முதல் 40 வயதானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இக்குடும்பத்தினர் நீராடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 25 கிலோமீற்றர் தூரத்தில் 7 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும், ஏனைய மூவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன எனவும் பொலிஸ் அதிகாரி ஹன்யன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM