நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் தன்னிடம் முழுமையான அறிக்கையை வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
துபாயிலிருந்து 8 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் சுங்கத் திணைக்களத்திடம் சபாநாயகர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கேட்குமாறு அலி சப்ரியிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அவர் இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM