மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 204 ரூபாவினாலும் ,5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 83 ரூபாவினாலும்,2.3 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 37 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 2982 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 1198 ரூபாவாகவும்,2.3 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 561 ரூபாவாகவும் காணப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5175 ரூபாவாக காணப்பட்ட 12.5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலையை தற்போது 2982 ரூபாவாக நிலைப்படுத்தியுள்ளதையிட்டு உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன்.
எரிபொருள் சிலிண்டர் விநியோகத்தில் காணப்பட்ட பாரிய சவால் மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகிய காரணிகள் எமக்கு பிரதான சவாலாக காணப்பட்டன.
நிறுவனம் என்ற ரீதியில் எதிர்கொண்ட பாரிய சவால்களை வெற்றிக் கொள்ள நிறுவனத்தின் சகல சேவையாளர்களும் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புடன் சவால்களை வெற்றிக்கொண்டுள்ளோம்.சமையல் எரிவாயு சிலிண்டரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நிறுவனத்துக்கு பிரதான சவாலாக காணப்பட்டது.
பல்வேறு தரப்பினரது வழிகாட்டலுடன் சிலிண்டரின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்.எரிவாயு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நிறைவடைந்த ஆறு மாத காலத்தில் மாத்திரம் நான்கு தடவைகள் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது.
உலக சந்தையில் எரிவாயு விலை குறைப்பு, ரூபாவின் பெறுமதி உயர்வு ஆகிய காரணிகளால் எரிவாயு விலை இந்த முறையும் குறைக்கப்பட்டது.எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய அடுத்த மாதமும் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM