எலும்பு முறிவுக்குரிய நவீன சிகிச்சை

03 Jul, 2023 | 04:51 PM
image

விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்களுக்கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்தில் அவர்களின் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும். குறிப்பாக, கான்ட்ரா எனப்படும் குருத்தெலும்பில் முறிவு ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டியிருக்கும். இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி முழுமையான நிவாரணத்தை பெற இயலும் என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மூட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால் ஆகிய இடங்களில் வலி, வீக்கம் போன்ற பாதிப்புகளும், அப்பகுதியை தொடும்போது மென்மையான உணர்வு ஏற்பட்டாலோ அல்லது அப்பகுதியில் இயக்கத்தின் எல்லை குறைந்தாலோ, அப்பகுதியில் உறுதியற்ற தன்மை ஏற்பட்டாலோ குருத்தெலும்பில் முறிவு ஏற்பட்டிருக்க சாத்தியக்கூறு அதிகம். 

அவ்வாறான சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

சிலருக்கு மருந்தியல் சிகிச்சை மூலமாகவும், சிலருக்கு அர்த்ராஸ்கோபிக் எனப்படும் சத்திர சிகிச்சை மூலம் மைக்ரோ ‌ஃபிராக்சர் சர்ஜரி எனப்படும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டும் முழுமையான நிவாரணத்தை வழங்குவர். 

மேலும் பாதிக்கப்பட்ட குருத்தெலும்பில் வேறு ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அதனை களைவதற்கான சிகிச்சையும் மேற்கொள்வர். அப்போது மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டியதிருக்கும். 

சிலருக்கு சத்திர சிகிச்சையுடன் பிசிக்கல் தெரபி என்ற சிகிச்சையும் ஒருங்கிணைந்து வழங்கி நிவாரணத்தை அளிப்பர். மருத்துவர் சத்திர‌ சிகிச்சைக்கு பிறகு முறையான பரிசோதனைகளை செய்து உறுதி செய்த பிறகு, நீங்கள் மீண்டும் விளையாட்டுத்துறையில் ஈடுபடலாம்.

- டொக்டர் ராஜ் கண்ணா

தொகுப்பு : அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28
news-image

குரல் வளை முடிச்சு அல்லது குரல்...

2026-07-31 16:37:19
news-image

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை :...

2026-07-31 14:15:13
news-image

புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-30 17:14:50
news-image

மேல் தோல் பகுதியில் உள்ள மரபணுகளின்...

2026-07-29 17:03:14
news-image

கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-07-28 17:21:34
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நியோஅட்ஜுவன்ட்...

2026-07-27 15:27:06