ஈ ஸ்கூட்டர் விற்பனை என இணையத்தில் விளம்பரம் - கொள்வனவு செய்ய வந்தவர்கள் வன்முறை -நாயை கொலை செய்தனர் - மூவருக்கு கத்திக்குத்து - அவுஸ்திரேலியாவில் சம்பவம்

Published By: Rajeeban

03 Jul, 2023 | 01:15 PM
image

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்னில் 2000 டொலர் பெறுமதியான ஈ ஸ்கூட்டர் தொடர்பில் மூண்ட மோதலில் மூவர் கத்திக்குத்து இலக்காகியுள்ளனர் வளர்ப்பு நாய் ஒன்று கொல்லப்பட்டுள்ளது.

ஈஸ்கூட்டரினை விற்பனை செய்வதாக இணையத்தில் விளம்பரம் செய்தவர்களின் வீட்டிற்கு இருவர் அதனை கொள்வனவு செய்ய சென்றதாகவும்  அவர்கள் போலிநாணயங்களை கொடுத்து அதனை கொள்வனவு செய்ய முயன்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஈஸ்கூட்டர் உரிமையாளர்கள் அது போலி நாணயம் என்பதை கண்டறிந்து ஸ்கூட்டரை வழங்க மறுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் கத்தியொன்றை காட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

எனினும் பின்னர் அவர்கள் துப்பாக்கிகள் பல கத்திகளுடன் அந்த வீட்டின் மதிலுக்கு மேலால் பாய்ந்து உள்ளே நுழைந்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர்களை வெளியில் வருமாறு தெரிவித்து அவர்கள் கதவை உடைக்க முயன்றுள்ளனர் அவர்களில் ஒருவர் நாயினை கத்தியால் குத்தியுள்ளார்

இதன் பின்னர் வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து அவர்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது .மேலும் இருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கத்திக்குத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

எனினும் பின்னர் இவர்களில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்