டுவிட்டரில் கணக்கு வைத்துள்ள ஒருவர் நாள் ஒன்றுக்கு எத்தனை பதிவுகளை பார்க்க முடியும் என்பதற்கு டுவிட்டர் நிறுவனம் வரம்பை நிர்ணயித்துள்ளது.
டுவிட்டர் பயன்படுத்துவோர் பலர் டுவிட்டர் பதிவுகளை படிக்க முடியவில்லை என நேற்று முன்தினம் முறைப்பாடு செய்தனர்.
நீங்கள் டுவிட்டர் பதிவுகளை பார்க்கும் வரம்பை மிஞ்சிவிட்டீர்கள் என்ற தகவலும் வந்துள்ளது. இதனால், டுவிட்டர் முடங்கிவிட்டதாக கருதப்பட்டது. ஆனால், பதிவுகளை பார்ப்பதற்கு டுவிட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் புதிய வரம்பு ஒன்றை நிர்ணயித்துள்ளார்.
அதன்படி டுவிட்டர் பயன்படுத்தும் பெரும்பான்மையோரால் நாள் ஒன்றுக்கு 1,000 பதிவுகளை மாத்திரமே பார்க்க முடியும்.
டுவிட்டரில் சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளையும், புதிய கணக்கு தொடங்கியவர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளையும் பதிவு செய்யமுடியும் என எலான் மஸ்க் கடந்த சனிக்கிழமை அறிவித்தார். சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 6,000 பதிவுகளை மாத்திரமே பார்க்க முடியும்.
டுவிட்டருக்கு விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் குறித்து அதன் உரிமையாளர் எலான் மஸ்க் கூறுகையில்,
‘‘ஒவ்வொரு நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப்படுத்தி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல்மிகப் பெரிய நிறுவனங்கள் வரை மிக அதிகளவிலான தரவுகளை பயன்படுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தேவையை நிறைவேற்ற அதிகளவிலான சேவையகங்களை (servers) இணையத்தில் எங்கள் குழுவினர் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இந்த வரம்புகள் விரைவில் தளர்த்தப்படும். சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 8,000 பதிவுகளை பார்க்க முடியும். ப்ளூ டிக் இல்லாத கணக்கு வைத்திருப்போர் 800 பதிவுகளை பார்க்க முடியும்.
தற்போது ப்ளூ டிக் கணக்குகளுக்கு 10,000, ப்ளூ டிக் இல்லாத கணக்குகளுக்கு 1,000, புதிதாக பதிவு செய்பவருக்கு 500 ட்விட்டுகள் என வரம்பு உள்ளது. டுவிட்டர் பயன்பாட்டில் உள்ள இந்த கட்டுப்பாடு தற்காலிகமானது.
இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM