நியுஸிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் விலகியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியின் போது ஸ்மித்தின் கணுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இவர் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை அணியின் உப தலைவரான டேவிட் வோர்னர் இந்திய தொடருக்கு விளையாடவுள்ளதால் அவருக்கு கிரிக்கெட் சபையால் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அணித்தலைமை பொறுப்பை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் கடுமையான ஆலோசனையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஈடுபட்டுள்ளது.