மாணவியை வகுப்பறையிலேயே வாளி ஒன்றில் சிறுநீர் கழித்து, பின்னர் அதைச் சுத்தம் செய்யப் பணித்த ஆசிரியை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தெற்கு கலிஃபோர்னிய பாடசாலை ஒன்றில், வகுப்பு நேரத்தின்போது மாணவ, மாணவியர் எக்காரணம் கொண்டும் வெளியே செல்வதற்கு அனுமதி இல்லை.

இந்த நிலையில், 14 வயது மாணவி ஒருத்தி வகுப்பு நேரத்தின் போது இயற்கை உபாதைக்கு ஆளானார். அவரை வெளியே செல்ல அனுமதிக்காத ஆசிரியை, வகுப்பறையில் உள்ள வாளியொன்றில் சிறுநீர் கழித்துவிட்டு அதை வகுப்பறை வோஷ்பேசினில் ஊற்றிச் சுத்தம் செய்யப் பணித்திருக்கிறார்.

அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி வேறு வழி தெரியாததால் வெட்கமும் அவமானமும் பிடுங்கித் தின்ன, வகுப்பில் மாணவர்கள் இருக்கும்போதே தனது உபாதையைப் போக்கியிருக்கிறார். இந்த அவமானத்தால் மனம் குழம்பிய அந்தச் சிறுமி தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.

2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம், வாய்வழியே பரவிப் பரவி இறுதியாக ஊடகத்தின் செவிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்த அடிப்படை மனித உரிமைச் செயலை ஊடகங்கள் கண்டித்ததையடுத்து, குறித்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு சுமார் பதின்மூன்று இலட்சம் டொலர்களை அபராதமாகவும், 41 ஆயிரம் டொலர்களை மருத்துவச் செலவுகளுக்காகவும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது.