வெள்ளவத்தை பகுதியில் ஒருதொகை வல்லப்பட்டைகளை சட்டவிரோதமாக கடத்திச்செல்ல முற்பட்ட ஐவரை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் இந்தியர்கள் என பொலஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாகனமொன்றில் கடத்திச் செல்லப்பட்ட போதே குறித்த வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட ஐவரும் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.