ஆப்கானிஸ்தானில் நிரூபணமான ஆஸி. படைகளின் போர்க்குற்றம்

Published By: Vishnu

02 Jul, 2023 | 04:25 PM
image

ஐங்கரன் விக்கினேஸ்வரா 

அவுஸ்திரேலிய படைகளால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து நாடு தீவிர கவனம் செலுத்தியது சமீபத்தில் தான் என்று சிறப்பு புலனாய்வாளரும் முன்னாள் நீதிபதியுமான மார்க் வெய்ன்பெர்க் மெல்போர்னில் ஊடகவியலாளர்களிடத்தில் கூறினார்.

“எனக்குத் தெரிந்தவரை, அவுஸ்திரேலிய நீதிமன்றம் அல்லது இராணுவ நீதிமன்றத்தால் எந்தவொரு அவுஸ்திரேலியப் படைவீரர்களும் எப்போதாவது கடுமையான போர்க்குற்றமாக கருதக்கூடிய எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரியவில்லை என்றும் கூறினார். 

பென் ரொபர்ட்ஸ் - ஸ்மித் வழக்கின் தீர்ப்பிற்குப் பின்னரான சூழலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நியூயோர்க் இரட்டைக்கோபுரம் 2001 செப்டம்பரில் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையான மக்கள் கொல்லப்பட்டனர். அதனால் அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இத்தாக்குதலை ஆப்கானில் உள்ள தலிபான்களே தொடுத்தனர் என்ற சந்தேகத்தின் காரணமாக தலிபான்களுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்த நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அமெரிக்காவுடன் கூட்டாளிகளாக இணைந்த அவுஸ்திரேலியத் துருப்புக்கள் 2002இல் ஆப்கானிஸ்தானில் களம் புகுந்தன.

இந்நிலையில், அங்கு நடந்த போர்க்குற்றங்களில் 39 பேரை அவுஸ்திரேலியா படுகொலை செய்தனர் என்ற அதிர்ச்சி அறிக்கை 2020இல் வெளியானது.

அவுஸ்திரேலிய விசேட படைப்பிரிவினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை அப்போது வெளியிட்டது. இதன்போது அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானிஸ்தானில் 39பொதுமக்களை கொலை செய்தனர் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணை மூலம் வெளியாகியது.

ஆப்கானில் 57 சம்பவங்கள் தொடர்பில் 300க்கும் அதிகமானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் இந்த அறிக்கை வெளியாகியது. 25படையினர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது குற்றங்களிற்கு உதவியுள்ளனர் என விசாரணை அறிக்கை தெரிவித்தது.

2009 முதல் 2013 முதல் சிறைக்கைதிகள், விவசாயிகள், பொதுமக்களை கொலை செய்தமைக்காக 19முன்னாள் மற்றும் தற்போதைய படைவீரர்களை விசாரணை செய்யவேண்டுமென விசாரணை அறிக்கை பரிந்துரை செய்தது. அவுஸ்திரேலியாவின் விசேட வான்சேவை படையணியை சேர்ந்தவர்களே இந்த போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.

இக்குற்றச்சாட்டுக்களையடுத்து நவம்பர் 2020இல் அவுஸ்திரேலியா குறைந்தது 10சிறப்புப் படைவீரர்களுக்கு பணிநீக்கம் தொடர்பான அறிவித்தலை அனுப்பியுள்ளது.

இந்த விசாரணைகளின் போது ஒருபோர்வீரக் கலாசாரத்தின் வெட்கக்கேடான பதிவுகள் வெளியாகியுள்ளன என்று அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையின் தலைவர் தெரிவித்தார். இந்த கொலைகள் எவற்றையும் மோதலின் உச்சகட்டத்தின் போது நிகழ்ந்தவைகளென தெரிவிக்க முடியாதவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான கொலைகளுக்கான நம்பத்தகுந்த ஆதாரங்களை உள்ளடக்கிய அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய பின்னர் பத்து வீரர்களை பணிநீக்கம் செய்ய அவுஸ்திரேலியா நடவடிக்கையை எடுத்திருந்தது.

அவுஸ்திரேலிய சிறப்பு படை வீரர்களினால், நிராயுதபாணியான ஆப்கானிய கைதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட மொத்தம் 39பேர் 23சம்பவங்களில் கொலைசெய்யப்பட்டதாக நம்கத்தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி முழுமையான அறிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கம் 2020இல் வெளியிட்டது.

2005 மற்றும் 2016 க்கு இடையில் ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய சிறப்புப் படை வீரர்களின் நடத்தை குறித்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணையின் தொகுப்புகளை விவரித்த ஜெனரல் அங்கஸ் ஜோன் காம்ப்பெல், போரின் மத்தியில் படுகொலைகள் இடம்பெற்றதாற்கான ஆதராங்கள் உள்ளதாகவும் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பானர்வர்களில் சிலர் இன்னும் அவுஸ்திரேலிய இராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், இந்த கொலைகள் விரைவில் நியமிக்கப்படவுள்ள சிறப்பு புலனாய்வாளருக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் கம்ப்பெல் அப்போது குறிப்பிட்டார்.

முன்னதாக, வியட்நாமில் மைலாய் படுகொலைக்காக அமெரிக்க இராணுவ லெப்டினன்ட் வில்லியம் காலேவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. 

2003இல் ஈராக்கில் அபு கிரைப் சிறை துஷ்பிரயோகம், அமெரிக்க வீரர்கள் சார்லஸ் கிரானர், லின்டி இங்கிலாந்து மற்றும் பலர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

2006இல் 14வயது ஈராக் சிறுமியை கற்பழித்து கொலை செய்ததற்காகவும், அவரது குடும்பத்தினரைக் கொன்றதற்காகவும் அமெரிக்க துருப்புக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

2007இல் நான்கு அமெரிக்க பிளாக்வாட்டர் தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்களால் 17ஈராக் குடிமக்கள் கொல்லப்பட்டமைக்கும் வழக்குத் தொடரப்பட்டது.

2010இல் மூன்று ஆப்கானிஸ்தான் குடிமக்களை கொலை செய்ததற்காக அமெரிக்க துருப்புக்கள் தண்டிக்கப்பட்டனர். 2012இல் ‘காந்தகார் படுகொலை’ என்று அழைக்கப்படும் - 16 ஆப்கானிஸ்தான் குடிமக்களை கொலை செய்ததற்காக அமெரிக்க இராணுவ துப்பாக்கி சுடும் ரொபர்ட் பேல்ஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இப்போர்க்குற்ற நிகழ்வுகள் அமெரிக்காவை போரில் பொறுப்புக்கூறலை சர்வதேச போர்க்குற்றவியல் வேண்டியது. மேலே பட்டியலிடப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்குகள் அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டது.

ஈராக் படையெடுப்பிற்கு ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாக உறுப்பினர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை அமெரிக்கா நிராகரித்து மறுத்துவிட்டது.

ஆயினும் இதற்கு மாறாக போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர் அவுஸ்திரேலியாவின் அன்றைய சிரேஷ்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் அங்கஸ் ஜோன் கம்ப்பெல், ஆப்கானிஸ்தானிடம் மன்னிப்புக் கோரிமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவுஸ்திரேலிய பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் சூடு பிடித்துள்ள இப்போர்க்குற்ற விவகாரம் குற்றஞ்சாட்டப்பட்ட போர்க்குற்றவாளி பென் ரொபர்ட்ஸ்-ஸ்மித்தின் விக்டோரிய விருதை மீளப் பெறவும் பலர் கோரியுள்ளனர். காலங் கடந்தாவது உண்மை வெளிச்சத்திற்கு வந்ததாக பென் ரொபர்ட்ஸ்-ஸ்மித்தின் அவதூறு விசாரணையின் முடிவு வெளிவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றி அடைந்தவர்களின் தோல்வியும் தோல்வி அடைந்தவர்களின்...

2024-06-15 19:04:27
news-image

தெற்காசியாவின் பார்வையில் மோடியின் மூன்றாவது பதவிக்காலம்

2024-06-15 18:02:34
news-image

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வரலாற்று முக்கியத்துவ...

2024-06-15 17:28:10
news-image

கதவை திறந்த ரணில்

2024-06-14 13:40:31
news-image

Factum விசேட கண்ணோட்டம்: தேர்தலுக்குச் செல்லும்...

2024-06-13 10:04:03
news-image

Factum கண்ணோட்டம்: ரைசியின் மரணத்தின் மூலம்...

2024-06-12 18:03:09
news-image

இலங்கை ஒருகாலத்தில் செய்தது போல இஸ்ரேல்...

2024-06-12 10:58:31
news-image

தேர்தல் நிச்சயமற்ற தன்மையே பொருளாதார மீட்சியை...

2024-06-11 15:21:50
news-image

தமிழ் பொது வேட்பாளர் குறித்த கரிசனைகளை...

2024-06-10 18:29:19
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழ் கட்சிகளுக்குள்...

2024-06-10 18:24:08
news-image

அரசாங்கத்தின் மறைமுக எச்சரிக்கையை உணரவில்லையா கம்பனிகள்?...

2024-06-10 17:59:48
news-image

இடம்பெயர்ந்து வரும் பாலஸ்தீனியர்கள் போல வந்து...

2024-06-10 16:19:25