மினுவாங்கொடையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் தாக்கி கொலை மிரட்டல் : மற்றுமொரு சிறைச்சாலை உத்தியோகத்தரே சந்தேகநபர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்

02 Jul, 2023 | 10:45 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

மினுவாங்கொடையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மற்றுமொரு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரே சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனைத்து தகவல்களையும் வழங்கியதாக தெரியவந்துள்ளது.கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் தாக்குதலின் போது சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி அதனை “ஹந்தயா” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

புதிய மகசின் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் கடந்த மே மாதம் 12 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் மினுவாங்கொடையிலுள்ள அவரது வீட்டிற்கு வந்த மூவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அதன்படி, சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர் உட்பட இருவர் நுவரெலியாவில் டீ- 56 துப்பாக்கி, 2 பிரவுனிங் ரக துப்பாக்கிகள் மற்றும் 167 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை நடத்தியதில், ஹந்தயா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான சிறைச்சாலை அதிகாரியின் வீட்டைக் கண்டுபிடிக்குமாறு மற்றுமொரு சிறைச்சாலை காவலர் தகவல் வழங்கியுள்ளதாக சந்தேகநபர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர்கள் வந்த வேனையும் விசாரணை அதிகாரிகள்  மீட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த தாக்குதலை ஒளிப்பதிவு செய்த சந்தேக நபர்கள் மூவரும் அதனை வெளிநாட்டில் உள்ள பாதாளக்குழு உறுப்பினருக்கு  அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாக்குதலுக்குள்ளான அதிகாரி நேர்மையாக கடமையை செய்ததால் ஏற்பட்ட மனக்கசப்பு  இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.தாக்குதலுக்குள்ளான அதிகாரி 2018 முதல் 2022 வரை சிறைச்சாலையில்  அதிகமான ஹெராயின் சம்பந்தப்பட்ட பறிமுதல்கள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகளைக் மீட்டுள்ளார். 2018/19 ஆம் ஆண்டில் சிறையில்  தடை செய்யப்பட்ட பொருட்களைக் கைப்பற்றிய அதிகாரி என்ற விருதையும் அவர் பெற்றார்.

இதன் விளைவாக, பெரும்பாலான குற்றவாளிகள் அவருடன் வெறுப்பில் இருந்துள்ளனர். மேலும் விசாரணை அதிகாரிகள் அவர்களில் ஒருவரான ஹண்டயா என்ற குற்றவாளியின் சக ஊழியரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20