மொனராகலை பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞன் மொனராகலை நீதவான் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குறித்த இளைஞன், இன்று அதிகாலையில்  மதுப்போதையில் வீட்டுக்கு சென்றதால், பெற்றோருடன் அவனுக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதனால் விரக்தியடைந்த அவன் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

இதன்போது படுகாயமடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிந்துள்ளார்.