விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் செயற்படுகிறது - சரத் வீரசேகர

01 Jul, 2023 | 12:30 PM
image

(எம்.மனோசித்ரா)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே தான் அரசாங்கம் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் கூட்டமைப்பு அதனை எதிர்க்கின்றது. தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போன்று தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதிக்கோ , நம்பிக்கை பொறுப்பு நிதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

மத்திய வங்கி ஆளுனரும் மிகத் தெளிவாக இதனைக் குறிப்பிட்டுள்ளனர். எனவே மக்கள் இது தொடர்பில் வீண் அச்சமடையத் தேவையில்லை.

55 வயதின் பின் ஓய்வு பெறும் எவருக்கும் எவ்வித சிக்கலும் இன்றி தமது ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் , எந்த தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அதற்கு எதிர்ப்பினையே வெளியிடும். கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் அம்பாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் இலக்கு நாட்டை பிளவடையச் செய்வதாகும். கூட்டமைப்பின் எம்.பி.க்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர். எனவே அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50