(நெவில் அன்தனி)
லண்டன், லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது ஆஷஸ் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க இங்கிலாந்தைவிட 221 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் இங்கிலாந்தை விட 91 ஓட்டங்கள் அதிகமாக எடுத்திருந்த அவுஸ்திரேலியா, 3ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக வேளையோடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது அதன் 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
டேவிட் வோர்னர் (25), மார்னுஸ் லபுஸ்சான் (30) ஆகியோரே ஆட்டம் இழந்தவர்களாவர்.
உஸ்மான் கவாஜா 58 ஓட்டங்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
போட்டியின் 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை (30) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அதன் கடைசி 6 விக்கெட்களை வெறும் 46 ஓட்டங்களுக்கு இழந்தது.
ஹெரி புறூக் 50 ஓட்டங்களைப் பெற்றார். 2ஆம் நாள் ஆட்டத்தில் பென் டக்கெட் 98 ஓட்டங்களையும் ஸக் க்ரோவ்லி 48 ஓட்டங்களையும் ஒல்லி போப் 42 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்திருந்தனர்.
பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 86 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ரவிஸ் ஹெட் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM