லைட்டர் வெடித்து எரிகாயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, பளை இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கேதீஸ்வரி (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சமையலுக்காக எரிவாயு அடுப்பை லைட்டர் மூலம் பற்றவைக்க முயன்ற வேளையில் அது வெடித்து அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றியுள்ளது.
எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM