ஞானசார தேரர், பொதுபலசேனா மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான 2014 அளுத்கம, பேருவளை வன்முறைகள்

Published By: Rajeeban

30 Jun, 2023 | 12:39 PM
image

டி.பி.எஸ். ஜெயராஜ்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சமீபத்தில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் குறித்த பொருத்தமான கேள்வியொன்றை டுவிட்டரில் எழுப்பியிருந்தார்.

நாட்டில் வழிபடப்படும் ஏனைய மதங்களை அவமானப்படுத்திய ஞானசார தேரரையும் ஏனையவர்களையும் ஏன் கைதுசெய்யவில்லை என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

நகைச்சுவை கலைஞர் நடாசா எதிரிசூரிய வெளியிட்ட வார்த்தைகளை விட ஞானசார தேரர் மற்றும் அவரை போன்றவர்கள் வெளியிடும் கருத்துக்கள் மிகவும் ஆபத்தானவை என அவர் தெரிவித்திருந்தார். நடாசா எதிரிசூரிய புத்தரை அவமதிக்கும் கருத்துக்களுக்காக சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார்.

இஸ்லாமிய மதத்தை அவமதித்த தேவாலயங்களையும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களையும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களையும் எரியூட்டிய  ஞானசார உட்பட ஏனையவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக குரோதத்தை பரப்பினார்கள். அவை நடாசா தெரிவித்ததை விட வன்முறை மிக்கவை என குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சர்ச்சைக்குரிய கடினமான விடயங்களை வெளிப்படையாக தெரிவிப்பதில் பெயர் பெற்றவர்.

பொதுபலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர் தனது நச்சுத்தன்மை மிக்க முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலமே பிரபலமானார் என்பது மறுக்க முடியாத உண்மை.

அவ்வேளை குரோத பேச்சுக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டின.

பௌத்த மத குருமாரும் பொதுபலசேனாவும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் விடயத்தில் தீவிரமாக செயற்பட்டு வந்தபோதிலும், 2014ஆம் ஆண்டு ஜூன் மாதமே ஞானசார தேரர் உலகளாவிய ரீதியில் பிரபலமானார்.

2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம மற்றும் பேருவளையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மூலம் பௌத்த மத குரு தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டியதாக அவ்வேளை பொதுபலசேனா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வன்முறைகளை தூண்டுவதில் ஞானசார தேரர் முக்கிய பங்காற்றினார். ஆனால், அவர் நேரடியாக வன்முறைகளில் ஈடுபடவில்லை.

அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் சர்வதேச ஊடகங்கள் பலவற்றில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இந்த செய்திகளில் ஞானசார தேரரின் பெயர் முக்கியமாக இடம்பெற்றது.

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் முக்கியமானவராக காணப்படும் அசின் விராதுவுடன் ஞானசார தேரர் அவ்வேளை ஒப்பிடப்பட்டார்.

9 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நான் அதிகளவில் எழுதியிருந்தேன்.

வரலாற்றை அறியாதவர்கள் அதனை மீண்டும் செய்வார்கள் என அயர்லாந்தின் எட்மன்ட் பேர்ன் ஒருமுறை தெரிவித்தார். கடந்த காலத்தை நினைவில் வைத்திராதவர்கள் அதனை மீண்டும் செய்வார்கள் என்றார் ஸ்பானிஷ் தத்துவஞானி ஜோர்ஜ் சன்டயானா. வரலாற்றிலிருந்து பாடம் கற்க தவறுபவர்கள் அதனை திருப்பிச்செய்வார்கள் என்றார் வின்ஸ்டன் சேர்ச்சில்.

இந்த பின்னணியிலேயே இதை பற்றி முன்னர் எழுதப்பட்ட கட்டுரைகளின் உதவியுடன் பொதுபலசேனா மற்றும் அளுத்கம, பேருவளை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விடயங்களை மீள ஆராய்கின்றது.

பொசன் விபத்து

பொசன் விபத்து ஒரு சிறிய விபத்தே. அடுத்து ஏற்பட்ட தீயை  தாமதமாக பற்றவைத்த உண்மையான தீப்பொறியாகும்.

ஜூன் 12 பொசன் தினம்; பொது விடுமுறை – பௌத்த தினம்.

அன்று முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியூடாக அயகம சமித்த தேரர் முச்சக்கர வண்டியில் பௌத்த ஆலயமொன்றை நோக்கிய பயணம் செய்துகொண்டிருந்தார். அவ்வேளை சில முஸ்லிம் இளைஞர்கள் வீதியோரமாக தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பௌத்த மத குரு தொடர்ந்து பயணிப்பதற்கு இடையூறாக காணப்பட்டன.

சிங்களவரான முச்சக்கரவண்டி சாரதி இளைஞர்களை ஏசியதுடன் இன அடிப்படையில் அவர்களை ஏசினார். இதற்கு முஸ்லிம் இளைஞர்களும் அதே விதத்தில் பதிலளித்தனர்.

சமித்த தேரர் இளைஞர்களை ஏசியவேளை அவரையும் அதேபோன்று இளைஞர்கள் ஏசினர். ஒரு முஸ்லிம் இளைஞர் முச்சக்கரவண்டி சாரதியின் கையை இழுத்தார்.பௌத்த மதகுரு தள்ளப்பட்டார்.

இந்த சம்பவம் பின்னர் திரிபுபடுத்தப்பட்டது. முஸ்லிம் இளைஞர்களால் பௌத்த மதகுரு தாக்கப்பட்டார் என்ற  பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து இந்த வதந்தி பரவத் தொடங்கியது. முஸ்லிம்கள் பௌத்த மதகுருவை தாக்கியுள்ளனர். அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்ற செய்தியும் பரவியது. பெருமளவு மக்கள் திரளத் தொடங்கினர். பௌத்த மதகுருவை தாக்கியதாக தெரிவிக்கப்படும் முஸ்லிம் இளைஞர்களை கைதுசெய்யவேண்டும் என கோரி பெருமளவு சிங்களவர்கள் பொலிஸ் நிலையத்தின் முன்பாக திரண்டனர். பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்களும் இடம்பெற்றன.

அதன் பின்னர், அந்த கும்பல் வன்முறையில் இறங்கியது. 12ஆம் திகதி முஸ்லிம்களுக்கு சொந்தமான 6 வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன. அவ்வேளை போக்குவரத்து அமைச்சராக பணி புரிந்த களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நிலைமையை கட்டுப்படுத்த முயன்றவேளை அவரை நோக்கி கூக்குரல் எழுப்பினர். அவரது வாகனம் தாக்கப்பட்டது.

இறுதியாக, அளுத்கமவில் பொலிஸின் கலகம் அடக்கும் பிரிவினர் பெருமளவில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதை தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. கலகக் கும்பலை கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை பிரயோகமும் இடம்பெற்றது.

மறுநாள் பௌத்த மதகுருவுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட இரு முஸ்லிம் இளைஞர்களையும் பொலிஸில் சரணடையுமாறு முஸ்லிம் சமூகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

அவர்கள் பொலிஸில் சரணடைந்தனர். அந்த சம்பவத்துடன் தொடர்பில்லாத முஸ்லிம் மௌலவி ஒருவரும் அவர்களுக்கு துணையாக சென்றார். பொலிஸார் அவர்கள் மூவரையும் கைதுசெய்து களுத்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

பொதுபலசேனா நுழைந்தது

அதன் பின்னர், அளுத்கமவுக்கு சென்ற பொதுபலசேனாவின் ஞானசார தேரர் ஜூன் 12ஆம் திகதி சம்பவத்துக்கு முஸ்லிம்களை குற்றஞ்சாட்டி அறிக்கையொன்றை வெளியிட்டார். பொலிஸார் மசூதிக்குள் வாழ்கின்றனர் என அவர் குற்றஞ்சாட்டினார். அதாவது அவர்கள் முஸ்லிம்களுக்கு சார்பாக நடந்துகொள்கின்றனர் என்றார்.

அவரும் பொதுபலசேனாவின் செயற்பாட்டாளர்களும் அந்த பகுதியில் உள்ள சாசன ஆராக்ச பலமண்டலயவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். சிங்கள ராவயவும் கலந்துகொண்டது.

இந்த சந்திப்பில் சாசன ஆராக்ச பலமண்டலயவின் தலைமையின் கீழ் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொதுப்பேரணியை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

பொதுபலசேனாவின் அளுத்கம சந்திப்புக்கு முன்னர் சமூக ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பெருமளவு வெறுப்புணர்வு பரப்பப்பட்டது. இந்த பதிவுகளில் வெளிப்படையாக வன்முறை குறித்து பேசப்பட்டது. நாங்கள் பெட்ரோல் கொண்டுவரவா என்பது போன்ற கேள்விகள் காணப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை பொதுபலசேனா அளுத்கமவில் பேரணிக்கு திட்டமிட்டவேளை பல முஸ்லிம் அமைப்புகள் அந்த பேரணிக்கு அனுமதி வழங்கவேண்டாம் என கோரி பொலிஸ்மா அதிபருக்கும்  ஏனைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் கடிதங்களை அனுப்பியிருந்தன.

முஸ்லிம்கள் அச்சமும் சந்தேகமும் வெளியிட்ட போதிலும், பி.பி.எஸ். தலைவரின் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டங்களை தடை செய்யும் அரசாங்கம் பொதுபலசேனாவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது என அவ்வேளை அரசாங்கத்தில் அங்கம் வகித்த நீதியமைச்சராக பதவிவகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் தலைவர்கள் பயந்த விடயம் இடம்பெற்றது. சாசன ஆரக்ச பணமண்டலய அளுத்கம பேரணியை முன்னெடுத்தது பொதுபலசேன அதனை இயக்கியது பொதுபலசேனா ஆதரவுடனான பேரணியில் 7000 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் வேறு பகுதியை சேர்ந்தவர்கள். அளுத்கமவை சேர்ந்தவர்கள் இல்லை; வேறு இடங்களை சேர்ந்தவர்கள்.

முக்கிய பேச்சாளரின் தூண்டும் பேச்சு

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முக்கிய பேச்சாளர் அவர் இனவாதம் நிறைந்த ஒரு ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்தினார். அதில் அவர் பொலிஸாரும் இராணுவத்தினரும் சிங்களவர்கள் என தெரிவித்ததுடன் சிங்களவர்களை துன்புறுத்துபவர்கள் தமிழர்களாக இருந்தாலும் சரி முஸ்லிம்களாக இருந்தாலும் சரி தப்ப முடியாது என குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் சிங்கள பொலிஸ் உள்ளது. சிங்கள இராணுவம் உள்ளது. சிங்களவர்கள் மீது எவராவது கை வைத்தால், அது அவர்களின் முடிவாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

ஞானசார தேரரின் வீடியோக்கள் வைரலாகின.

அளுத்கமவில் முஸ்லிம்கள் தொடர்புபட்ட சம்பவங்களை பல தடவை கண்டித்த ஞானசார தேரர் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியமைக்காக அரசாங்கத்தை விமர்சித்தார்.

அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்ஷவையும் அவர் கண்டித்தார். இந்த நாட்டின் சிறுபான்மையினர் எப்படி தங்களை வலுப்படுத்துகின்றனர் என்பதை மகிந்த மாத்தயா புரிந்துகொள்ள வேண்டும் என்றார். 

ஞானசார தேரர் சிங்களவர்கள் அனைவரும் தங்கள் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணையவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அச்சம் ஏற்படுத்தும் அறிவிப்பொன்றையும் அவர் வெளியிட்டார். பேருவளையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தர்கா நகரின் பெயரை மாற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். மதுமாதவ அரவிந்த என்ற பாடகர் மேடையில் தோன்றி சிங்களத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படவைக்கும் பாடல்களை பாடினார்.

900 பொலிஸார் அருகில் பாதுகாப்பு கடமையில் இருக்க பொதுபலசேனாவின் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அது 5 மணிக்கு நிறைவடைந்ததும் பௌத்த மதகுருமார்கள் பொதுமக்களின் ஊர்வலம் ஆரம்பமானது. இதில் சிங்கள ராவயவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கூட்டத்தில் ஞானசார தேரரோ அல்லது பொதுபலசேனாவின் முக்கிய பிரமுகர்களோ கலந்துகொள்ளவில்லை.

அளுத்கம மசூதி

காவி உடை அணிந்த சுமார் 150 - 200 இளைஞர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் அளுத்கம மசூதிக்கு அருகில் சென்றதும் மசூதிக்கு அருகிலிருந்து சில கற்களும் மரக்கட்டைகளும் எறியப்பட்டன. அவற்றால் ஊர்வலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இது மேலும் சீற்றத்தை தூண்டுவதற்கு காரணமாக அமைந்தது.

ஊர்வலம் முஸ்லிம்கள் வாழும் பகுதி ஊடாக சென்றதும் அங்கு அமைந்துள்ள வீடுகள், கடைகளை ஊர்வலத்தின் முன்பகுதியில் சென்றவர்கள் தாக்கத் தொடங்கினர். கற்கள் எறியப்பட்டன. ஜன்னல்கள், கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

சில சந்தர்ப்பங்களில் தீ மூட்டுவதற்கான முயற்சிகளும் இடம்பெற்றன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம் குடும்பங்கள் அந்த பகுதியிலிருந்து தப்பியோடத் தொடங்கினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27
news-image

புது டில்லி சட்ட பேரவை தேர்தல்:...

2025-02-03 16:39:04